பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தொல்காப்பியம் நுதலியபொருள் கொள்ளுதல் வேண்டும் எனப் பேராசிரியர் கூறிய விளக்கம் இவண் நினைக்கத் தகுவதாகும். உவமானமும் பொருளும் தம்மின் ஒத்துள்ளன என உலகத் தார் ஏற்று மகிழும் வகையில் உவமை யமைதல் வேண்டு மென்றும், இனி, உபமேயமாகிய பொருளினை உவமையாக்கி உவமையை உவமிக்கப்படும் பொருளாக்கி மயங்கக் கூறுமிடத் தும் அஃது உவமம்போல உயர்ந்ததாக்கி வைக்கப்படுமென்றும், பெருமையும் சிறுமையும் பற்றி உவமங் கூறுங்கால் உலக வழக்கினைக் கடந்து இன்னுவாகச் செய்யாது சிறப்புடைமையில் நீங்காது கேட்டோர் மனங்கொள்ளும்படி செய்தல் வேண்டு மென்றும் இவ்வியல் 8 முதல் 10 வரையுள்ள சூத்திரங்களில் உணர்த்தப்பட்டன. உவமத்தினையும் பொருளினையும் ஒப்புமை காட்டி இயைத் துரைக்குங்கால் அவற்றின் இடையே வருஞ் சொல்லாகிய உவம உருபுகள் அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப, எள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள், மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஒட, புரைய என வரும் முப்பத் தாறும் அவை போல்வன பிறவுமாகிப் பல்வேறு குறிப்பினவாய் வரும் என்பது இவ்வியல் ஆம் சூத்திரத்தாற் கூறப்பட்டது. இதன்கண், அன்னபிறவும் என்ற தல்ை, இங்குச் சொல்லப் படாத நோக்க, நேர, அனேய, அற்று, இன், எந்து, ஏர், சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர, துணைப்ப, மலேய, அமர முதலிய பிறவுருபுகளும், ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பற்றி வருவனவும் எனவென்னெச்சங்கள் பற்றி வருவனவும் ஆகிய உவமவுருபுக ளெல்லாம் தழுவிக்கொள்ளப்பட்டன. புலி போன்ற சாத்தன்' எனப் பெயரெச்சமாகவும், புலி போலப் பாய்ந்தான்' என வினை