பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18? தொல்காப்பியம் நுதலியபொருள் வினையும் குறிப்பும் என இருவகையாகவும், பயனுவமம் நன்மை பயத்தலும் தீமை பயத்தலும் என இருவகையாகவும், மெய்யுவமம் வடிவும் அளவும் என இருவகையாகவும், உருவுவமம் நிறமும் குணமும் என இருவகையாகவும் வருதலால் எட்டாயின என்பர் இளம்பூரணர். இனி, மேற்கூறிய நால்வகையுவமமும் உவமத் தொகை நான்கும் உவமவிரி நான்குமாக வருதலால் எட்டாத லுடைய எனவும், முன்னர் வினை முதலிய நான்குவமைகளுக்கும் எவ்வெட்டுருபுகளாகத் தொகுத்துரைக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதியும் இரண்டு கூருகி நாலிரண்டு எட்டுப் பகுதிகளாக வரும் எனக் கருத்துரைத்தலும் பொருந்துமெனவும் கொள்வர் பேராசிரியர். பெருமை பற்றியும் சிறுமை பற்றியும் ஒப்புமை கொள்ளப் படும் உவமைகள், மேல் நகை முதல் உவகையிருகச் சொல்லப் பட்ட எண்வகை மெய்ப்பாடுகளின் வழியே புலப்படத் தோன்று மென்று கூறுவர் அறிஞர் எனவே எண்வகை மெய்ப்பாடும் பற்றி உவமை எட்டெனப்படு மென்பதாயிற்று. உவமை யெனப்பட்ட பொருளால் உபமேயமாகிய பொருளுக்கு ஒத்தனவெல்லாம் அறிந்து துணியும் பொருட் பகுதியும் உள்ளன; பலவாகி வரும் அப்பொருட் பகுதிகளின் இலக்கண வகையைக் கருவியாகக்கொண்டு அவை நன்கு துணியப்படும். இவ்வாறு உவமையாகிய பொருளைக்கொண்டு உவமேயமாகிய பொருளுக்குப் பொருந்தியன இவையென ஆராய்ந்துணருமிடத்து நெடுங்காலமாக அடிப்பட்டு வழங்கிய உலக வழக்கினையொட்டியே அவை அறியப்படுவனவாம். அடையும் அடையடுத்த பொருளும் என இரண்டாய் ஒன்றிய உவமேயப் பொருள், அடையும் அடையடுத்த பொருளும் என இவ்வாறு இரண்டாய் நிறுத்தப்படும் உவமையின் வழியே உவமித்துரைக்கப்படும் என்பர் ஆசிரியர்.