பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 15 போன்றே பேராசிரியர், சேவைரையர், கல்லாடர், நச்சினர்க் கினியர், தெய்வச்சிலையார் முதலிய பெருமக்களும் தொல்காப் பியத்தைப் பலமுறையும் பயின்று நுண்பொருள் கண்டு உணர்த்தி யுள்ளார்கள். தொல்காப்பிய வுரையாசிரியர்களாகிய இப்பெரி யோர்கள், ஆசிரியர் தொல்காப்பியரைது கால நிலைமையை நன்குணரும் வாய்ப்பினைத் தம் காலத்துப் பெற்றவரல்லர்; எனினும் இழைத்துணர்ந்து ஈண்டிய தம்கூர்த்த மதியாலும், தொல்காப்பிய இலக்கண வரம்பினை நன்குணர்ந்து இயற்றப்பெற்ற பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள் முதலிய பழந்தமிழிலக்கி யங்களைத் துறையோகப் பயின்றுணர்ந்த தெளிவிலுைம், தொல் காப்பியத்துக்கு மெய்ப்பொருள் காணுந்துறையில் எதிர்பாராத அளவுக்குப் பெரிதும் வெற்றி பெற்ருர்களென்பதிற் சிறிதும் ஐயமில்லை. இடைக்காலத்தில் தமிழ் வேந்தரின் ஆட்சிநிலை தளரவே அரசியல், கல்வி, சமயம், நாகரிகம் ஆகிய எல்லாத் துறைகளிலும் இந்நாடு அயலார்க்கு அடிமைப்பட நேர்ந்தமை யால், எத்துணைக்கூர்த்த மதியினரும் தம் தமிழ் நாட்டின் தொன் மைச் சிறப்பினை யறிந்துகொள்ளாதபடி அயலவர் கூட்டுறவு தமிழ்மக்களறிவினைத் திரையிட்டு மறைத்துவிட்டதென்றே கூற லாம். இந்நிலையில் சீர்த்த நுண்மானுழைபுலனமைந்த பேரா சிரியர்களின் அறிவாற்றலையுங் கடந்து பிற்றைநாளில் ஒரு சில பிழைகள் தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருத்தல் இயல் பேயாம். மக்களை நிலத்தாற் பிரித்துரைப்பதன்றி நிறத்தாற்(வருணத் தால்) பிரித்துப் பேசுதல் பழந்தமிழ் மரபன்ரும். அயலாரால் இந்நாட்டிற் பிற்றைநாளிற் புகுத்தப்பட்ட நால்வகைச் சாதிப் பிரிவு, தொன்மை வாய்ந்த தொல்காப்பிய மரபியலிலும் பிற் காலத்தவரால் நுழைத்துரைக்கப்பட்டுள்ளது. இளமை, ஆண்மை, பெண்மை முதலியன காரணமாக உயிர்களுக்கு வழங்கும் மரபுப் பெயர்களே விரித்துரைக்கும் பகுதியாக அமைந்தது தொல்