பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H36 தொல்காப்பியம் நுதலியபொருள் எடுத்தோதப்பட்ட இலக்கணங்களில் வேறுபாடு தோன்ற வந்த உவமப் பகுதிகளே அங்ங்ணம் வேறுபட வந்தனவாயினும் மேற்கூறிய பகுதியால் ஒப்புநோக்கி அமைத்துக்கொள்ளும் இடமறிந்து பொருத்துக என்பர் ஆசிரியர். உவமைக்கும் பொருட்கும் ஒப்புமை மாறுபடக் கூறுதலும், ஒப்புமை கூருது பெயர் முதலியன கூறும் அளவால் மறுத்துக் கூறுதலும், ஒப்புமை மறுத்துப் பொருளை நாட்டிக் கூறுதலும், ஒப்புமை மறுத்தவழிப் பிறிதோர் உவமை நாட்டுதலும், உவமை யும் பொருளும் முற்கூறி நிறுத்திப் பின்னர் மற்றைய ஒவ்வா வென்றலும், உவமைக்கு இருகுணங் கொடுத்து வறிதே கூறு மிடத்து உவமையினை இரண்டாக்கி ஒன்றற்குக் கூறிய அடை மொழி ஒன்றற்குக் கூருது கூறுதலும், ஒப்புமை குறைவுபட உவமித்து மற்ருெரு குணங்கொடுத்து நிரப்புதலும், ஒவ்வாக் கருத்தினுல் ஒப்புமை கொள்ளுதலும், உவமத்திற்கன்றி உவமத் திற்கேதுவாகிய பொருள்களுக்குச் சில அடைகூறி அவ் அடை மொழியானே உவமிக்கப்படும் பொருளினச் சிறப்பித்தலும், உவமானத்தின் உவமேயமாக்கியும் அது விலக்கியும் கூறுதலும், இரண்டு பொருளாலே வேறுவேறு கூறிய வழி ஒன்று ஒன்றற்கு உவமையென்பது கொள்ள வைத்தலும் ஆகிய இவைபோல்வன வெல்லாம் வேறுபட வந்த உவமப் பகுதிகள் என்றும், இவற்றை வினை, பயன், மெய், உரு என்னும் நான்கும்பற்றி ஏனையுவமத் தின்பாலும், உவமையும் பொருளுமாகி வேறுவேறு விளங்க வாராது குறிப்பிற்ைகொள்ளவருதல்பற்றி உள்ளுறை யுவமத்தின் பாலும்படுத்து உணரப்படுமென்றும் கூறுவர் பேராசிரியர் உவமையை உவமிக்கப்படும் பொருளின் நீக்கிக் கூறுதலும் நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கும் மரபாகும் என்றும், உவமிக்கப்படும் பொருளோடு உவமை தோன்ற வருதலேயன்றி உவமையது தன்மை கூறுதலும் உவமையாதற்கு உரியதென்றும்