பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 தொல்காப்பியம் நுதலியபொருள் கி. பி. ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்த தண்டியாசிரியர் வட் மொழியில் இயற்றிய காவியா தரிசம் என்னும் அலங்கார நூலி லும் அதன் தமிழ்மொழி பெயர்ப்பாகிய தண்டியலங்காரம், மாற னலங்காரம் முதலிய பிற்கால நூல்களிலும் வகுத்துரைக்கப்படும் அணிவிகற்பங்கள் ஆசிரியர் தொல்காப்பியனர் காலத்தில் வெவ் வேறணிகளாக வழங்கின அல்ல என்பதும், தொல்காப்பியனுர் கூறும் உவமப் பகுதிகளைச் செய்யுளிற் பிரிப்பின்றி ஒன்ருகிய பொருளுறுப்பெனக் கொள்வதன்றிச் செய்யுளுக்கு வேருகி நின்று அதற்கு அழகு செய்யும் வேருேர் அலங்காரமாகக் கூறுதல் பொருந்தாதென்பதும் தொல்காப்பிய வுரையாசிரியராகிய பேரா சிரியர் முதலிய பண்டைத் தமிழ்ச் சான்ருேர் துணியாகும். "இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும் சொல்லதிகாரத்தினுள்ளுஞ் செய்யுளியலுள்ளுங் கூறுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்றவை செய்யுட்கண்ணே அணியாம் என இக்காலத்தாசிரியர் நூல் செய்தாருமுளர். அவை ஒரு தலையாகச் செய்யுட்கு அணியென்று இலக்கணம் கூறப் படா என்ன? தாம் காட்டிய இலக்கணத்திற் சிதையா வழியும் வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன் ருகியும் வரும். அல்லது உம் பொருளதிகாரத்துட் பொருட் பகுதிகளெல்லாஞ் செய்யுட்கு அணியாகலான்... அவையெல் லாந் .ெ த குத் து அணியெனக் கூருது வேறுசிலவற்றை வரைந்து அணியெனக் கூறுதல் பயமில் கூற்ரும். அவற்றைப் பொருளுறுப்பு என்பதல்லது அணியென்பவாயின், சாத்தனையும் சாத்தல்ை அணியப்பட்ட முடியும் தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல, அவ்வணியுஞ் செய்யுட்கு வேருதல் வேண்டும். செய்யுட்கு அணி செய்யும் பொருட்படை எல்லாங் கூருது சிலவே கூறியொழியின் அது குன்றக்கூறலாம்.”