பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் #39 எனவரும் பேராசிரியர் உரைப்பகுதி, ஆசிரியர் தொல் காப்பியனர் கூறிய உவமப் பகுதிகளின் நுட்பத்தையும் அந்நுட்பம் இனிது விளங்காத பிற்காலத்தில் வேறு காரணமுணரப்பெருது இடர்ப்பட்டுச் செய்தனவாகிய அணியிலக்கணங்களின் அமைதி யையும் நன்கு புலப்படுத்தல் காணலாம். செய்யுளியல் மேலுணர்த்தப்பட்ட அகமும் புறமுமாகிய பொருண்மை யெல்லாவற்றிற்கும் இடமாய் விளங்கும் செய்யுளது இலக்கணம் உணர்த்தினமையின் இது செய்யுளியலென்னும் பெயர்த்தாயிற்று எழுத்ததிகாரத்திலும் சொல்லதிகாரத்திலும் உலக வழக்கிற்குஞ் செய்புள் வழக்கிற்கும் வேண்டும் விதிகளை விரவிக்கூறிப் பொரு ளதிகாரத்தில் இதுகாறும் பெரும்பாலும் உலக வழக்கிற்கு வேண் டிய விதிகளையே கூறிவந்த ஆசிரியர், அப்பொருள் பற்றிச் செய் யுள் இயலுமாறு கூறக்கருதி, இவ்வதிகாரத்துட் குறிக்கக் தகுந்த செய்யுளிலக்கணமெல்லாம் இவ்வியலில் தொகுத்துணர்த்துகின் ருர். எனவே பொருளதிகாரத்தின் முன்னுள்ள ஏழியல்களும் உலக வழக்குஞ் செய்யுள் வழக்குமாகிய அவ்விரண்டற்கும் பொது வென்பதும், செய்யுளியலாகிய இது, செய்யுட்கே யுரித்தென்பதும் பெறப்படும். இவ்வியலிலுள்ள சூத்திரங்களே 235-ஆக இளம்பூர் ணரும், 243-ஆகப் பேராசிரியரும் நச்சிஞர்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இனி, செய்யுளியலாகிய இதனை யாப்பதிகாரம் என வேருேர் அதிகாரமாக்கிக் கூறுவாருமுளர். அங்ங்னங் கூறின் 1. "எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யர்ப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, "பொருளதிகாரம் வல் லாரை எங்குந் தலேப்பப்பட்டிலேம்’ என்று வந்தார்’ (இறையனர் களவியல் பாயிரவுரைப் பகுதி) என்பது இங்கு நோக்கத்தக்க 高f@四·