பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 193 குறிலும் நெடிலும் தனித்து வந்தாலும் ஒற்றடுத்து வந்தா லும் நேரசையெனப்படும். குறிலிணையும் குறில் நெடிலும் தனியே வரினும் ஒற்றடுத்துவரினும் நிரையசை யெனப்படும். கோ, ழி, வேந், தன்-என நேரசை நான்கும், வெறி, சுரு, நிறம், குரால் என நிரையசை நான்கும் வந்தன. 'இரண்டெழுத் தானுகாது ஒரெழுத் தாளுதலின் நேரிய அசை நேரசை யென்ருயிற்று. இரண்டெழுத்து நிரைதலின் இணையசை யென்னும் பொருள்பட நிரையசை யென்ருயிற்று என நேர், நிரை என்பவற்றின் பெயர்க்காரணங் கூறுவர் நச்சினர்க்கினியர். இவ்வசைகளுக்கு உறுப்பாய் நின்ற குறிலும் நெடிலும், மாத்திரையாகிய ஓசையளவிஞல் தம்முள் ஒவ்வா வாயினும், எழுத்தாந் தன்மையில் ஒன்றெனவே கொண்டு எண்ணப்படும் தகுதி நோக்கி அவ்விரண்டும் ஒவ்வோரலகு பெறும் என விதிக்கப்பட்டன. மேற்கூறப்பட்ட நேர், நிரை என்னும் இரண்டசையும், குற்றியலுகரம் முற்றியலுகரம் என்பவற்றுள் ஒன்றை இறுதியிற் பெற்றுப் பிளவுபடாது ஒருசொற்றன்மை எய்திவரின், அவை முறையே நேர்பு, நிரைபு என்னும் இருவகை அசைகளாகும். தனிக் குற்றெழுத்தாகிய நேர்சையின் பின் இங்ங்ணம் இருவகை யுகரமும் வந்து நேர்பசையாதல் இல்லை. உதாரணம்: வண்டு, நாகு, பாம்பு, மின்னு, நாணு, தீர்வு என நேரசை முன்றின் பின்னும் இருவகை உகரமும் வந்து நேர்பசையாயின. வரகு, குரங்கு, மலாடு, பளுட்டு, இரவு, புணர்வு, உலாவு என நிரையசை நான்கின் பின்னர்க் குற்று கரமும் நிரையசை மூன்றின் பின்னர் முற்றுகரமும் வந்து நிரை பசையாயின. நேரின்பின் உகரம் வருதலின் நேர்பு நிரையின் பின் உகரம் வருதலின் நிரைபு என இவையிரண்டும் காரணப் Quយជូ៣ហ៊៣.