பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#94 தொல்காப்பியம் துதலியபொருள் மேற்கூறிய நால்வகை அசைகளுள் நேர், நிரை என்னும் இரண்டும் இயலசை எனப் பெயர் பெறும். நேர்பு, நிரைபு என்னும் ஏனைய இரண்டும் உரியசை எனப் பெயர்பெறு எம்ன்பர் ஆசிரியர். நேர் நிரை என்பன செயற்கை வகையால் இயற்றிச் சேர்க்கப்படாது இயற்கை வகையால் நின்றங்குநிற்ப வரும் அசைகளாதலின் அவ்விரண்டும் இயலசையெனப்பட்டன. இயலசையாகிய இவை செய்யும் தொழில் செய்தற்கு உரிய வகையில் அமைந்தவை நேர்பும் நிரையும் ஆதலின் அவ் விரண்டும் உரியசை எனப்பட்டன. 'குற்றியலுகரமும் அற்றெனமொழிய (புணரியல்-3) என்ற நூற்பாவில் ஒற்றுப்போன்று புள்ளி பெறுமெனப்பட்ட குற்றுகரம், தன்னல் ஊரப்பட்ட மெய்யும் தானும் அரை மாத்திரைத்தாய் நின்றதேனும் ஒற்றுப்போன்று ஒடுங்கியிசையாது அகன்றிசைக் கும். அதல்ை அதனை ஒற்றென அடக்கி அலகுபெருதென விலக்கு தற்கு இயலாது. இனி, குற்றியலுகரம் ஒரு மாத்திரையுடையதாய் அகன்றிசையாமையின் அதனை உயிரிற் குற்றெழுத்தெனக் கொண்டு அலகு கொள்ளுதற்கும் இடமில்லை. இந்நிலையில் இதனை வேருேர் அசையாக்குதலே செய்யத்தகுவது எனத் துணிந்த பண்டைத் தமிழ்ச் சான்ருேர், இவ்வுகரத்தினைக் கருவி யாகக் கொண்டு நேர்பு, நிரைபு என்னும் இருவகை உரியசைகளை வகுத்துரைத்தனர். 'வண்டு வண்டு வண்டு வண்டு' என நின்ற வழிப் பிறந்த அகவலோசை, மின்னு மின்னு மின்னு. மின்னு' என நின்றவழியும் பெறப்படுதலானும். வெண்பாவின் ஈற்றடி வண்டு எனக் குற்றுகர வீருக நின்றுழியும் கோலு என முற்றுகர விருக நின்றுழியும் ஒத்த ஒசையவாமாதலானும், குற்று கரம் சார்ந்து தோன்றுமாறுபோல அம்முற்றுகரமும் வருமொழி காரணமாக நிலைமொழி சார்ந்து தோன்றுதல் ஒப்புமை நோக்கி யும் குற்றுகரத்தின் செய்கை முற்றுகரத்திற்கும் வேண்டி அதனைக்