பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 19; குற்றுகரம்போல நேர்பு, நிரைபு என்னும் அசைக்கு உறுப்பாகக் கொண்டனர். இங்ங்ணம் தொல்காப்பியனுர்க்கு முற்பட்ட தமிழ்ச் சான்ருேள் எழுத்தாலாகிய அசைகளின் இயல்புணர்ந்து அவற்றை நேர், நிரை, நேர்பு, நிரைபு என நால்வகையாகப் பகுத்துரைத்தனராக, பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்கள் நேர்பு, நிரைபு என்னும் அசைகளின் இறுதிக்கண் நின்ற குற்றுகர முற்றுகரங்களைத் தனியசையாகப் பிரித்து அவற்றை நேரசை யென அடக்கி, நேரும் நிரையும் என இருவகை அசைகளே கொண்டனர். அன்னேர் தாம் ஈரசைச் சீர்களாகக்கொண்ட நேர்பு, நிரைபு என்பவற்றுக்குத் தேமா, புளிமா என்னும் வாய்ப் பாட்டால் ஒசையூட்டின் செப்பலோசை குன்றுமென்றஞ்சி அவற்றுக்கு முறையே காசு, பிறப்பு எனக் குற்றுகரவீற்ருல் உதாரணம் காட்டியும், சீரும் தளையும் சிதையவருமிடத்துக் குற்றியலுகரம் அலகுபெருதென விதித்தும், வெண்பாவீற்றில் சிறுபான்மை முற்றுகரம் வரும் என உடன்பட்டும் இவ்வாறு பல்வேறு வரையறைகளைச் செய்துகொள்வர். அசைக்கு உறுப்பாம் நிலையில் குற்றியலிகரம் ஒற்றெழுத்தின் இயல்பிற்ரும் என்பர் தொல்காப்பியர். எனவே சார்பெழுத்தாகிய அது, ஒற்று நின்ருங்கு நின்று இயலசை உரியசைகளைச் சார்ந்து வருதலும், ஒற்றுப்போல எழுத்தெண்ணப் படாமையும் ஆகிய இரு நிலைமையும் ஒருங்குடைத்தென்பது பேராசிரியர் கருத் தாகும், குற்றியலிகரம், "குழலினி தியாழினி தென்ப" (திருக்குறள்-66) என ஒற்றியல்பிற்ருய் நின்று அலகு பெருமையும், ஏனை உயிரெழுத்தின் இயல்பிற்ருய், "மற்றியா னென்னுளேன் கொல்லோ" (திருக்குறள்.208)