பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 197 உறுப்பாதல் போன்று நாண்-உடையரிவை என்ருங்கு வரும் வருமொழி முதலுகரம் இவ்வசைகட்கு உறுப்பாகாதெனவும், 'நீர்க்கு நிழற்கு என வரும் வேற்றுமையுருபு நிலைமொழித் தொழிலாதலால் அவ்வுருபும் நேர்பசை நிரையிசைகட்கு உறுப்பாமென்பது இதனுற் பெறப்படுமெனவும், குற்றுகரமாயின் ஆட்டுத்தாள் சேற்றுக்கால் 'எய்போற் கிடந்தானென் னேறு' வேலாண் முகத்த களிறு என இடையும் இறுதியும் நின்று நேர்பும் நிரைபும் ஆம் எனவும் இச்சூத்திரவுரையிற் பேராசிரியர் கூறிய விளக்கம் இங்கு நினைவுகூரத் தக்கதாகும். மேற்கூறிய குற்றுகர முற்றுகரங்கள் ஒற்ருெடு நிற்கவும் பெறும்; அவ்வொற்றுத் தோன்றிய ஒற்ருதல் வேண்டும் என்பது விதி. எனவே நடக்கும் எனவும் உண்ணும் எனவும் நிலைமொழி ஒற்றுடையவாயின் தேமாவும் புளிமாவாகவும் ஆவதல் லது அவை நேர்பும் நிரையும் ஆகா எனவும் சேற்றுக்கா னீலம்' உரவுச்சின வேந்தன் என்ருங்கு வருமொழி வல்லெழுத்து மிகின் நேர்பும் நிரையும் ஆம் எனவும், உம்மை எதிர்மறை யாதலால் இவ்வசைகள் ஒற்றின்றி வருதலே பெரும்பான்மை எனவும் கருதுவர் பேராசிரியர். அசையையும் சீரையும் ஒசையொடு சேர்த்திப் பாகுபடுத்து உணர்த்துதல் செய்யுளிலக்கணத் துறையில் வல்லவர்களது நெறியாகும் என்பர் ஆசிரியர். எனவே பொருளுக்கேற்பச் சொற்களைப் பிரித்தவழித் தளையும் சீரும் சிதையுமானுல் அவ் விடத்து ஓசையை நோக்கி அதன்படி சேர்த்தல் வேண்டுமென் பது கருத்தாயிற்று. மலர்மிசை யேகின்ை மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் ” என்றவழி வாழ்வார் என்பதனைப் பொருள் நோக்கி ஒரு சீராக் கின் ஓசை கெடும். அதன்கண் வாழ் என்பதனைப் பிரித்து