பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#98 தொல்காப்பியம் நுதலியபொருள் முதல் நின்ற சீருடன் இணைத்தவழி ஓசை கெடாதாம். இங்கி னம் பொருள் நோக்காது ஓசையே நோக்கிச் சீர்வகுக்கும் முறையினைப் பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்கள் வகையுளி' என வழங்குவர். 4. சீர்:- இரண்டசை கொண்டு புணர்த்தும் மூன்றசை கொண்டு புணர்த்தும் ஒசை பொருந்தித் தாளவறுதிப்பட நிற்பது சீரெனப்படும். சீரியைத் திறுதல் என்பது, வழக்கியல் செய்யுளா மாற்ருல் யாப்பினுட் பொருள் பெறப் பகுத்துப் பதமாகியவற்றிற் செல்லு, தல். சாத்தன் எனவும் உண்டான் எனவும் இரண்டசை கொண்டு சீராயின. கானப்பேர் எனவும் உண்ணுதன எனவும் மூவசை புணர்ந்து சீராயின. இனிச்செய்யுளுள். " தாமரை புரையுங் காமர் சேவடி” என்றவழி ஈரசையினுற் சீராகி நான்கு சொல்லாகி ஒசையற்று நின்றவாறும், 'எந்நன்றி கொன்ருர்க்கும் உய்வுண்டா முய்வில்லை” என்றவழி மூன்றசையினுற் சீராகி அவ்வளவினுல் ஒசையற்று நின்றவாறும் காணலாம். ‘ஈரசை கொண்டும் மூவச்ை புணர்த்துஞ் சீரியைந்து இற்றது சீர் என்றமையால், ஒருசீர் பலசொல் தொடர்ந்து வரினும் அவை ஒன்றுபட நிற்றல் வேண்டு மென்பதும், எனவே உலகத்துச் சொல்லெல்லாம் ஈரசையானும் மூவசையானுமன்றி வாரா என்பதும் பெறப்படும். ஒரு சொல்லைப் பகுத்துச் சீர்க்கு வேண்டுமாற்றல் வேறு சீராக்கிய வழியும் அச்சீர்வகையான் வேறு சொல்லிலக்கணம் வெறுதும்.