பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் స్త్రి

  • மம்மர் நெஞ்சினன் ருெழுதுநின் றதுவே"

என்புழி நின்றது' என்னுங் குற்றுகரவீற்றுச் சொல்லினைப் பிரித்து வேருெரு சீ க் க, முற்றுகரமாகி வேறுபடுதல் காணலாம்: 'சீரெனப்படுமே எனச் சிறப்பித்தவதனுல் ஈரசைச் சீரும் மூவசைச் சீரும் ஆகிய இவை சிறப்புடைய என்பதும் ஓரசைச் சீர் இவை போலச் சிறப்பில என்பதும் பெறப்படும். ஈண்டு ‘எனப்படும் என்பதே பற்றி இத்துணைச் சிறப்பிலதாய நாலசைச் சீரும் கொள்ளப்படும் என்ற கருத்தால் நாலசைச்சீர் கொண்டா ரும் உளர். அன்னேர் நாலசைச்சீர்க்கு உதாரணமாக வழக்கினுள் காட்டும் உண்ணு நின்றன. முதலிய சொற்கள் இரண்டு சொல் விழுக்காடாய்ப் பிளவுபட்டு நிற்றலின் ஒரு சீரெனப்படாமையானும்: அவை சீராகவருஞ் செய்யுள் இன்மையானும், நாலசைச் சீர் காட்டல் வேண்டுவோர் வஞ்சிப்பாவினுள் வந்த நேரிழை மகளி ருணங்குளுக் கவரும் என்ற ஆசிரிய அடியினை இரு சீரடியாக உரைப்பினும் அதற்குத் துங்கலோசையின்ருகலானும், வஞ்சிச் சீர் அறுபது காட்டுகின்றவழி நேர்பசை நிரையசைகள் யாண்டும் அலகு பெருமையானும் நாலசைச்சீர் கொள்ளுதல் தொல் காப்பியனுர்க்கு உடன்பாடன்றென மறுப்பர் பேராசிரியரும் நச்சி ஞர்க்கினியரும். மேற்சொல்லப்பட்ட அசைகளில் இயலசை மயங்கி வந்தன இயற்சீரெனப்படும். உரியசை மயங்கி வந்தன ஆசிரியவுரிச் சீரெனப்படும் என்பர் ஆசிரியர். நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நான்கசைகளையும் ஒன்ருேடொன்று கூட்டிப்பெருக்க ஈரசைச்சீர் பதினரும். நேர், நிரை என்னும் இயலசை இரண் டினையும் பெருக்கப் பிறந்த ஈரசைச்சீர் நான்கும் இயற் சீரெனப் படும், அவைதேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்பன. நேர்பு,