பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 懿 முதலியவற்ருலும் இயன்றுவரும் அடிகள் பலவுளவாயினும் அவை அத்துணைச் சிறப்பில என்பதும், இவ்வியலில் எழுத்து வகையாற் பகுத்துரைக்கப்படும் குறளடி சிந்தடி, நேரடி, நெடிலடி, கழி நெடிலடி என்னும் ஐவகைப் பாகுபாடும் நாற்சீரடிக்கே ஏற்புடை பன என்பதும் தொல்காப்பியனர் கருத்தாகும். மேற்கூறிய அடியின்கண் உள்ளனவே தளையும் தொடையும்; அவை நாற்சீரடியின்கண் வருதலன்றி அவ்வடியின் நீங்க வருத லில்லை என்பர் ஆசிரியர். எனவே இவ்வியலில் தளேப்பகுதியாற் கட்டளையடி யெனவைத்து உறழ்ந்து கூறப்படுதலும் அறு நூற்றிரு பத்தைந் தென்னும் வரையறையும் நாற்சீரடியாகிய அளவடிக்கே யுரியன வென்பது நன்கு பெறப்படும். அடியின் சிறப்பே பாட்டென்று சொல்லப்படும் என்பர் ஆசிரியர். இங்கனங் கூறவே இத்துணை மாத்திரைகொண்டது இன்ன செய்யுளென்ருே இத்துணை அசையுஞ் சீருந் தளையுங் கொண்டது இன்ன செய்யுளென்ருே அளவியல் முதலிய ஏனையுறுப்புக்களால் செய்யுட்களை வரையறுத்துரைத்தல் இயலா தென்பதும் அடியென்னும் இவ்வுறுப்பொன்றே கூற இன்ன செய்யுளென்பது நன்கு விளங்குமென்பதும் ஆசிரியர் கருத்தாதல் இனிது புலனும். அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே என்பதற்கு, அடி இரண்டும் பலவும் அடுத்து வந்த தொடையே பாட்டு என்ற வாறு எனவும், தலை இடை கடைச் சங்கத்தாரும் பிறசான்ருே ரும் நாற்சீரான் வரும் ஆசிரியமும் வெண்பாவும் கலியுமே செய் தார்; வஞ்சிப்பா சிறு வரவிற்றெனக் கொள்க' எனவும் பேராசிரியர் கூறும் விளக்கம் இங்கு நினைக்கத்தகுவதாகும். நாற்சீரடியுள், நான்கெழுத்து முதல் ஆறெழுத்தளவும் அமைந்த மூன்றடியும் குறளடி யென்றும், ஏழெழுத்து முதல்