பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 தொல்காப்பியம் ஊர்கள் பெயர்பெற்று வழங்குதல் தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். அம்முறைப்படியே பழந் தமிழ்ச் சான்றேர்களிற் காப்பியன் என்னும் இயற்பெயருடையார் சிலர் நினைவாகக் காப்பியாறு, காப்பியக்குடி, காப்பியாமூர் என்னும் ஊர்ப் பெயர் கள் தோன்றி வழங்கி வருகின்றன. பிள்ளைப்பூதன், பூதன், ஆதன் என்னும் இயற்பெயருடையார் நினைவாகப் பிள்ளைப் பூதங்குடி, பூதங்குடி, ஆதனுர் என்னும் ஊர்ப் பெயர்கள் இக் காலத்தும் பயின்று வழங்கக் காண்கிருேம். இவ்வாறே காப்பியன் என்னும் இயற்பெயருடையார் நினைவாகக் காப்பியாறு, காப்பியக் குடி என்னும் ஊர்ப்பெயர்கள் தோன்றி வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும். சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தில் வரந்தரு காதை யில் வரும் காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து' என்ற தொடரிலுள்ள காப்பியத் தொல்குடி என்பது காப்பியன் என்னும் இயற்பெயரடியாகப் பிறந்த ஊர்ப் பெயராகவோ அன்றிக் காப்பியன் என்னுஞ் சான்ருேரை முதல்வராகக் கொண்ட குடிப் பெயராகவோ கருதவேண்டியுள்ளது. தென்னிந்தியக் கல்வெட்டு ஐந்தாம் தொகுதி 660-ஆம் எண்ணுள்ள முதல் இராசராசன் கல்வெட்டில், காப்பியன் ஆதித்தன் கண்டத்தடிகள் என்னும் பெயர் காணப்படுகின்றது. ஈண்டுக் காப்பியன் என்னுஞ்சொல் இயற்பெயராகவே வழங்கப்பெறுதல் காணலாம். காப்பியன் என்னும் இப்பெயர் காப்பியம் என்பதனடியாகத் தோன்றியதென்றும், இச்சொல் பார்ப்பாரது பழைய குடிவகையுள் (கோத்திரங்களுள்) ஒன்றைக் குறிப்பதென்றும், அது, காப்பியத் தொல்குடிக் கவின் பெற வளர்ந்து' எனச் சிலப்பதிகாரத்திற் குறிக்கப்பட்டதென்றும், கவியாகிய சுக்கிரனது மரபினைக் குறிக் கும் காவ்ய என்னும் வடசொல்லே தமிழிற் காப்பியம் எனத் திரிந்ததென்றும், காவ்ய கோத்திரத்தார் பிருகு முனிவரின் 1. சிலப்பதிகாரப் பதிப்பாசிரியராகிய ஐயரவர்கள் காப்பியக் குடியென்பது சீகாழிக்குத் தென்கிழக்கிலுள்ள தோர் ஊர்” என அடிக் குறிப்பில் விளக்கியுள்ளார்கள்.