பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 213 இனி, அடி, அறுநூற்றிருபத்தைந்தாமாறு: அசைச் சீர், இயற்சீர், ஆசிரியவுரிச் சீர், வெண்சீர், வஞ்சியுரிச் சீர் என்னும் ஐந்தினையும் நிறுத்தி இவ்வைந்து சீரும் வருஞ் சீராக உறழும் வழி இருபத்தைந்து விகற்பமாம். அவ்விருபத்தைந்தின்கண்ணும் முன்ருவது ஐந்து சீரையும் உறழ நூற்றிருபத்தைந்து விகற்ப மாகும். அந் நூற்றிருபத்தைந்தின் கண்ணும் நான்காவது ஐந்து சீரையும் உறழ அறுநூற்றிருபத்தைந்தாம் என்பது இளம்பூரணர் கூறிய விளக்கமாகும். இனி, எழுபது வகையின் வழுவிலவாகி வரும் அறுநூற் றிருபத்தைந்து என்னுந் தொகைக்குப் பேராசிரியர் பின்வருமாறு வகை கூறி விளக்கியுள்ளார்: ஆசிரியத்துள் இயற்சீர் 19, ஆசிரியவுரிச் சீர் 4 அசைச் சீர் 4 என இருபத்தேழாகி வரும். வெண்பாவினுள் ஆசிரிய வுரிச்சீர் நான்கும் ஒழித்து ஒழிந்த சீர் இருபத்துமூன்றும் வெண் சீர் நான்கினெடுந் தலைப்பெய்ய அவையும் அவ்வாறே இருபத் தேழாகி வரும். கலிப்பாவிற்கு நேரீற்றியற்சீர் முன்ருெழித்து ஒழிந்த இயற்சீர் பதினறும் ஆசிரியவுரிச்சீர் நான்கும் வெண்சீர் ந 1 ன் கும் என இருபத்துநான்காம். இவை மூன்று பகுதி யுந் தொகுப்ப எழுபத்தெட்டாயின. அவற்றுள் ஆசிரியத்துள் வந்த அசைச்சீர் நான்கினையும் வெண்பாவினுள் வந்த அசைச் சீர் நான்கினையும் இயற்சீர்ப்பாற்படுத்து அடக்குக என்று ஆண்டுக் கூறினமையின், ஈண்டு அவற்றை இயற்சீர்ப்பாற் படுத்து அடக்கின் எழுபதாகக் கொள்ளப்படும். அங்ங்னங் கொள்ளப்பட்ட சீர் ஒன்று ஒன்றைேடு தட்குங்கால் அவ்வெழுபது வகையானுமன்றித் தட்குமாறில்லை. அது நோக்கி எழுபது வகை யின் வழுவிலவாகி என்ருன், அங்ங்ணம் தளைசிதையா அடி, ஆசிரிய அடி முந்நூற்றிருபத்து நான்கும், வெண்பாவடி நூற் றெண்பத் தொன்றும், கலியடி நூற்றிருபதும் என அறுநூற்