பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 தொல்காப்பியம் நுதலியபொருள் நெடிலடி லணிநடை யசைஇய வரியமை சிலம்பின் 15-17 மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுத லொளிநிலவு வயங்கிழை யுருவுடை மகளிரொடு கழிநெடிலடி நளிமுழவு முழங்கிய வணிநிலவு மணிநக ரிருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை 18-20 கலனளவு கலனளவு நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை யென்பவ. தொருநீ மறைப்பி ைெழுகுவ தன்றே. எனவரும் ஆசிரியப்பாவினுள் பதினேழ் நிலத்து ஐவகையடியும் ஒருங்கு வந்தவாறு காணலாம். தத்தம் சீர்நிலை வகையாலும் தளேநிலை வகையாலும் இனிய ஓசை வேறுப்பாட்டினை யுடையனவாகிய ஐவகை யடியினும் ஏற்றவழி நிலைபெறுதற்குரிய தன் தன் சீர் உள்ளவழித தளை வேறுபாடு கோடல் வேண்டா” என்பர் ஆசிரியர். எனவே சீர் தானே ஓசையைத் தரும் என்ற வாரும் எனவும், ஐந்தடியினும் தன் சீர் ஏற்றவழி நிலைபெறுதலாவது, குறளடியாகிய ஐந்தெழுத் தினும் ஆறெழுத்தினும் ஓரசைச்சீரும் ஈரசைச்சீரும் வருதலன்றி மூவகைச் சீர்வாராமை எனவும் விளக்குவர் இளம்பூரணர். சீர்கள் தம்முட் பொருந்தும் வழி நிலைமொழியாகிய இயற் சீரின் ஈற்றசையும் வருமொழியாகிய சீரின் முதலசையும் நேராய் ஒன்றின் நேரொன்ருசிரியத் தளையாம்; நிரையாய் ஒன்றின் நிரையொன்ருசிரியத் தளையாம்." 1. தொல்-செய்யுள் 35, 40 ஆம் சூத்திரவுரைப் பகுதியில் பேராசிரியர் காட்டிய உதாரணச் செய்யுள். 2. தொல்-செய்யுள் 32-ஆம் சூத்திரம், இதனேப் பேராசிரிய ரும் நச்சிர்ைக்கினியரும் இரண்டு சூத்திரங்களாகப் பிரித்து வேறு பொருள் கூறுவர். 3. தொல்-செய்யுள்-53. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா என்னும் மூவகைப் பாக்களுக்கும் உரிய நாற்சீரடியின்கண்