பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 தொல்காப்பியம் துதலியபொருள் இயற்சீர் வெண்டளையாளுகிய வெண்பாவடி ஆசிரியப் பாவாவின்கண் நிற்றற்குரிய மரபினுல் நிற்பனவும் உள. (இயற் சீர்) வெண்டளே விரவியும் ஆசிரியத்தளை விரவியும் ஐஞ்சீரடியும் ஆசிரியப்பாவின்கண் வருவனவுள. அறுசீரடி ஆசிரியத்தளையொடு பொருந்தி (ஆசிரியப்பாவின்கண்) நேரடிக்கு முன்னுக நடை பெற்று வரும். எழுசீர்ால் வரும் அடி முடுகியற்கண் நடக்கும். மேற்சொல்லப்படட ஐஞ்சீரடிக்கும் அறுசீரடிக்கும் முடுகியல் வாராதென்று விலக்கார் அறிஞர். முடுகியலாகி வரும் மூவகை யடியும் ஆசிரியப்பாவினும் வெண்பாவினும் நிற்றல் இல்லை என்பர் ஆசிரியர். எனவே கலிப்பாவினுள் நிற்கப்பெறும் என்ற வாருயிற்று. " நாற் சீர் கொண்டது அடி (செய். 31) என ஒதிப் பின்னும் இருசீரடி வஞ்சிக்கண் உரித்தென ஒதி, ஐஞ்சீரடியும் அறுசீரடியும் எழுசீரடியும் உள என ஒதினமையான், அடியாவது இரண்டு (சீர்) முதலாக வருமெனவும் அவற்றுள் இருசீரடி குறளடி எனவும் முச்சீரடி சிந்தடி எனவும் நாற்சீரடி அளவடி எனவும் ஐஞ்சீரடி நெடிலடி எனவும் அறுசீர் முதலாக வரும் அடியெல்லாம் கழிநெடிலடியாம் எனவும் பிற நூலாசிரியர் கூறிய இலக்கணமும் இவ்வாசிரியர்க்கு (தொல்காப்பியனுர்க்கு) உடம் பாடென்று கொள்க. அறுசீர் முதலான அடிகளுள் எழுசீர் எண் சீர் சிறப்புடையன எனவும் எண்சீரின் மிக்கன சிறப்பில்லன. எனவும் அவ்வாசிரியர் உரைப்ப, இவ்வாசிரியரும் அடிக்குச் சீர் வரையறையின்மை "ஆங்ங்ணம் விரிப்ப அளவிறந்தனவே, பாங்குற வுணர்ந்தோர் பன்னுங்காலை” (செய்யுளியல்-49) என்ற தளுன் உணர்த்தினர் என்று கொள்க. ஈண்டு நாற்சீரடியை எடுத்தோதியது வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் அவ் வடியினுல் வருதலின் என்று கொள்க’ எனவரும் உரையாசிரியர் உரைப் பகுதியினைக் கூர்ந்து நோக்குங்கால், ஆசிரியர் தொல்காப்பியனர் எழுத்தளவு பற்றி