பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#20 தொல்காப்பியம் நுதலியபொருள் எனவே, ஆசிரியவடி பலவும் வந்து எருத்தடி முச்சீராகவே வருமென்பது உம், வெண்பாவியல் எனவே கட்டளை வெண்பா வானும் சீர்வகை வெண்பாவானும் வந்து ஈற்றடி முச்சீரான் வருமென்பது உம் பெற்ரும்” என்பர் நச்சினர்க்கினியர். 6. யாப்பு:- யாப்பு என்பது மேற்கூறிய அடிதோறும் பொருள் ஏற்று நிற்பச் செய்வதோர் செய்கையாகும். எழுத்து முதலாக அசை சீர் அடி எனத் தொடர்புற்று இயன்ற அடியினல் புலவன் தான் சொல்லக் கருதிய பொருளைச் சொற்கள் மிகாமலும் குறையாமலும் இறுதியளவும் முற்றுப்பெற நிறுத்துதல் யாப்பு என்று சொல்லுவர் செய்யுள் செய்யவல்ல புலவர். அத்தகைய யாப்பாவது பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் எனச் சொல்லப்பட்ட ஏழு நிலத்தினும் வளவிய புக ழையுடைய மூவேந்த கிங் சேர் சோழ பாண்டியரது ஆட்சியு பட்ட குளிர்ந்த தமிழகத்தில் (வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியாறும் மேற்கும் கி ழ க் கும் கடலும் ஆகிய நான்கு பேரெல்லேக்கு உட்பட்ட நிலப்பகுதியிலே வாழும் தமிழ் மக்கள்" வழங்கும் தொடர் மொழியமைப்பின்வழி நடைபெறுவதாகும் என இவ்வியல் 74, 75-ஆம் சூத்திரங்கள் கூறும். முடிக்க வரும் இவ்வுறுப்பினே முறையே ஆசிரியச் சுரிதகம் எனவும் வெள்ளேச் சுரிதகம் எனவும் வழங்குதல் மரபு. 1. நாற் பெயரெல்லே யகத்தவர் என்ற தொடர்க்கு மலே மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் நான்கு பெயரையுடைய தமிழ் நாட்டார்” எனப் பொருள் கூறுவர் நச்சிர்ைக்கினியர். ஆசிரியர் தொல் காப்பியனுள் காலத்தில், தமிழகம் சேர சோழ பாண்டியராகிய வண் புகழ் மூவரது ஆட்சிக்கே உட்பட்டிருந்ததென்பது 'வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என வரும் இச்சூத்திரத் தொடரால் நன்கு புலனுமாதலானும், தொண்டை மண்டலம் என்ற பிரிவு சோழருடைய கிளேயினராய்த் தொண்டையர் என்பார் தோன்றிய கடைச்சங்க காலத்திலே ஏற்பட்டதாதலானும் இத்தொடர்க்கு நச்சினர்க்கினியர் கொண்ட பொருள் பொருத்தமுடையதெனக் கருதுதற்கில்லே.