பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 223 அகவிக் கூறுதலால் அகவல் எனக் கூறப்பட்டது. ஒருவன் ஒன்றைக் கூறுதலும் அதுகேட்டு மற்ருெருவன் அதற்கு மறு மொழி சொல்லுதலுமாகிய இம்முறையிலன்றி, ஒருவன் தான் கருதியன வெல்லாவற்றையும் விடாது தொடர்ந்து சொல்லுத லாகிய உரையாடல் முறையை உலகியலிற் காண்கின்ருேம். அங்ங்ணஞ் சொல்லுவார் சொல்லின்கனெல்லாந் தொடர்ந்து கிடந்த ஒசை அகவல் எனப்படும் என்பர் பேராசிரியர். வெண்பாவாக யாக்கப்பட்டது அகவலோசை யன்று என்பர் ஆசிரியர். 'எனவே அகவுதலில்லாத ஓசையாம். இதனைப் பிற நூலாசிரியர் செப்பலோசை என்ப. அகவுதல் என்பது ஒரு தொழில். அத்தொழில் இதன்கண் இல்லாமையின் அஃதன்று' என்ருர்” என இளம்பூரணரும், 'அழைத்துக் கூருது ஒருவற்கு ஒருவன் இயல்புவகையான் ஒரு பொருண்மையைக் கட்டுரைக்குங் கால் எழுந்த ஓசை செப்பலோசை யெனப்படும். (அகவலும் செப்பலுமாகிய) அவ்விரண்டு மல்லது வழக்கினுள் (பிறிது) இன்மையின் அதா அன்று என அவைகளின் இலக்கணம் பெறலாயிற்று” என நச்சினர்க்கினியரும் கூறும் விளக்கம் அறியத்தக்கனவாகும். துள்ளலோசை கலிப்பாவிற்கு உரியதாகும். துள்ளுதலாவது, ஒழுகு நடையின்றி இடையிடை உயர்ந்து வருதல். செப்ப லோசைத்தாகிய வெண்சீர்ப்பின்னும் வெண்டளைக்கேற்ற சொல் லொடு புணராது ஆண்டு எழுந்த ஓசை துள்ளித்துள்ளி வந்தமையால் துள்ளலோசையாயிற்று. தூங்கலோசை வஞ்சிப்பாவிற்கு உரியதாகும். அடியிறுதியில் தூங்காது சீர்தொறுந் தூங்கப்படும் ஓசை துங்கலோசை யெனப்படும் என்ப. துள்ளலும் தூங்கலும் வழக்கினும் செய்யுளி னும் ஒப்ப வருவன அல்ல என்பர் பேராசிரியர்.