பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 தொல்காப்பியம் நுதலியபொருள் மருட்யாவிற்குரிய ஓசை, மேற்கூறிய தூங்கலும் துள்ளலும் ஒழிந்த ஏனைச்செப்பலும் அகவலும் ஆகிய இருகூறுமல்லது, தானுக வேறுபடுத்து இதுவெனக் காட்டும் தனி நிலையில்லை என்பர் ஆசிரியர். அகவல் முதலாகத் துங்கல் இறுதியாக மேற் கூறப்பட்ட நால்வகை யோசைகளையும் எதிர்சென்று எண்ணுங் கால் தூங்கல், துள்ளல், செப்பல், அகவல் என எண்ணுதல் முறையாதலின், அவற்றுள் பிற்கூறிய தூங்கலும் துள்ளலும் நீங்க “ஏனையிருசார் எனக் குறிக்கப்பட்டவை முறையே செப்பலும் அகவலும் ஆதலால், செப்பல் முன்னகவும் அகவல் பின்னகவும் வருவது மருட்பாவாயிற்று' என விளக்குவர் பேராசிரியர். மேற்கூறப்பட்ட ஒசைவகையாலல்லது அ வ் வோ ைச யொழித்துச் சீரும் தளையும் அடியும் பெறப் பாடல் செய்யார் அறிஞர் என்பர் ஆசிரியர். எனவே பாவிற்குரிய சீர் தளை அடி முதலிய இலக்கண முடையனவாயினும் பாட்டிற்கு இன்றியமையா தனவாக மேற்கூறப்பட்ட ஒசையமையாதன நூல் (சூத்திரம்) எனவும் உரையெனவும் கூறப்படுதலன்றிப் பாட்டெனச் சிறப்பித் துரைக்கப்படா என்பது ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும். துக்கென்னும் உறுப்பு இயலும் வகை மேற்சொல்லப்பட்ட நாலுமே எனயர் ஆசிரியர். எனவே இந்நான்கினடங்காத ஓசை விகற்பம் எதுவுமில்லை யென்பது அவர்கருத்தாதல் புலம்ை. 9. தொடை தொடைவகை யென்பது எழுத்துச் சொற் பொருள்களை எதிரெதிர் நிறுத்தித் தொடுக்கப்படுவனவாகிய தொடைவிகற்பம். இவை பூத்தொடை போலச் செய்யுட்குப் பொலிவு செய்வனவாதலின் தொடையெனப்பட்டன. தொடைவகையாகிய அவை மோனை, எதுகை, முரண், இயைபு என நான்கு நெறிப்பட்ட மரபினை யுடையனவாம்; அள பெடைத் தொடையொடு கூட ஐந்தெனவும் சொல்லப்படும்: