பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 தொல்காப்பியம் நுதலியபொருள் செந்தொடை மொழிமுதலாம் எழுத்துத் தொண்ணுற்று மூன்றும் மற்றை யடியினும் ஒத்துவருங்கால், அவைமோனேயுள் அடங்குதலின், ஒத்தனவாகிய அவற்றை யொழித்து ஒவ்வாதனவாகிய ஏனைய தொண்ணுற்றிரண்டெழுத்தொடும் உறழச் செந்தொடை எண் ளுயிரத் தைந்நூற்றைம்பத்தாறு வகையாம். “இவ்வகையில்ை தொடை விகற்பம் பதின்மூவாயிரத்தறு நூற்றுத் தொண்ணுற் றென்பதாம் என அறிக" என்பது இளம் பூரணர் கூறிய விளக்கமாகும். இனி, இச்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட 13699 என்ற தொகைக்கு இளம்பூரணர் கூறிய வகையிலன்றி வேருெரு வகை யால் விளக்கங் கூறுவதும் உண்டு. "நான்கு பாவும் பெற்ற ஐம்பத்தொரு நிலத்தவாகி விரிந்த அறுநூற்றிருபத் தைத்தடியும் அவற்ருெரோவடி இருபத்திரண்டு தொடையும் பெறப் பதின்மூவாயிரத் தெழுநூற்றைம்பதாய் வரும். அவற்றுள் ஐம்பத்தொரு நிலமும் களையப் பதின் 1. ஐம்பத்தொரு நிலமாவன : நாற்சீரடியுள், ஏழெழுத்து முதல் பதிகுறெழுத்து முடியவுள்ள வெள்ளேநிலம் 10; நாலெழுத்து முதல் இருபதெழுத்து முடியவுள்ள ஆசிரிய நிலம் 17, பதின்மூன் றெழுத்து முதல் இருபதெழுத்து முடியக் கலிநிலம் 8; நாலெழுத்து முதல் பதினேழெழுத்து முடிய வஞ்சிநிலம் 10; அளவடியல்லாதன வாகிய இருசிாடி, முச்சீரடி, ஐஞ்சீரடி, அறு சீரடி, எழுசீரடி, 岔* ஆகிய சீர் வகையடி நிலங்கள் 6: ஆக 51. (யா-வி.ப. #77. 2. ஆசிரியவடி 261. வெண்பாவடி 232, கலியடி 131, ஆக 525 அடியாம். (யா.வி.ப. 176) 3. மோனே 2, எதுகை 8, முரண் 5, இயைபு 1. பொழிப்பு. ஒரூஉ. செந்தொடை, இரட்டை, நிரனிறை என்பன 5, குறிப்புத் தொடை , ஆகத்தொடை 22. (யா.வி.ப 175.) க். "அடியிரண்டு இயைந்தவழித் தொடையாமென்ப தாகலின் (அவ்வாறு இரண்டாகத் தொடுக்கப்படாது ஒரடியாக வுள்ள) ஐம்பத்தொரு நிலம் களையப்பட்டன." {யா.வி.ப175.)