பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼32 தொல்காப்பியம் நுதலியபொருள் தொகையை ஒன்பதாலே பெருக்கின், ஆருயிரத்திருநூற்றுத் தொண்ணுற் ருென்ரும் எனவும், அத்தொகையை முற்கூறிய பதின்மூவாயிரத்துடன் கூட்டத் தொடைவகை பத்தொன் பதின யிரத்து இருநூற்றுத் தொண்ணுரற் ருென்றம் எனவும் கொள்வர் நச்சிஞர்க்கினியர். இங்ங்ணம் பேராசிரியரும் நச்சினர்க்கினியரும் வெவ்வேறு வகையிற் பொருள் கொண்டு கூறிய தொடைவகை விரிபற்றிய விளக்கங்கள் அனைத்தும் ஈண்டுக் காட்டப்புகின் மிக விரியுமாத லின் அவரவருரைகளிற் கண்டு தெளியத் தக்கனவாம். முற்கூறப்பட்ட தொடையினை ஆராய்ந்து மேலும் விரிப்பின் வரம்பிலவாம் எனவும், தொடைநிலைவகை மேற் சொல்லப்பட்ட பாகுபாட்டின்கண் அடங்குவன எனவும் கூறுவர் ஆகிரியர். மேல், அடியெனச் சிறப்பித்துரைக்கப்பட்ட நாற்சீரடிக்கண் பெருக்கிப் பெற்ற தொடை பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணுற் ருென்பதெனப்பட்டன. இவ்வாறே நாற்சீரடி யொழிந்த இருசீரடி முதலாக எண்சீரடி யிருகக் கிடந்த ஏனை அடிவேறுபாட்டின்கனெல்லாம் இத்தொடைகளைக் கூட்ட வரும் தொடைப் பகுதி வரையறையின்றிப் பலவாம் என்பதும், இங்ங் னம் எழுத்தாலும் சொல்லாலும் பொருளாலும் பலவேறு வகைப் பட விரித்துணர்த்தப்படும் தொடை விகற்பங்கள் யாவும் மேற் சொல்லப்பட்ட பாகுபாட்டின்கண் அடங்குவனவென்பதும் ஆசிரியர் தொல்காப்பியனர் கருத்தாகும். இனி, மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்பனவற்றின்கண், இணை, கூழை, முற்று, மேற்கதுவாய், கீழ்க் கதுவாய், கடை, கடையிணை, பின், கடைக்கூழை, இடைப்புணர் என வேறுபடுத்து உறழ்ந்து, எழுத்தந்தாதி அசையந்தாதி சீரந்தாதி எனவும், உயிர்மோனை உயிரெதுகை, நெடில்மோனை