பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 233 நெடிலெதுகை, வருக்கமோனே வருக்கவெதுகை, இனமோனை இனவெதுகை எனவும், மூன்ருமெழுத்தொன்றெதுகை இடையிட் டெதுகை ஆசெதுகை எனவும் இவ்வாறு வருவனவற்றை மேற் கூறிய வகையினன் எழுத்து வேறுபாட்டினன் உறழவும், நிரனிறையாகிய பொருள்கோள் வகையானும் ஏகபாதம் எழுகூற் றிருக்கை முதலாகிய சித்திரப் பாக்களானும் உறழவும் வரம்பில வாகி விரியும் என்பர் இளம்பூரணர். 10. நோக்கு:- நோக்காவது, ஒரு செய்யுளைக் கேட்டோர் அதன்கண் மாத்திரை முதலாக அடி நிரம்புந் துணையும் பாடற் பகுதியை மீண்டும் மீண்டும் கூர்ந்து நோக்கி அதனகத் தமைந்த பொருள் நலங்களை உய்த்துணர் தற்குக் கருவியாகியதோர் உறுப்பாகும். இதன் இயல்பினை, 'மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப்படுமே" (செய்-100) எனவரும் நூற்பாவில் ஆசிரியர் விளங்க அறிவுறுத்தியுள்ளமை காணலாம். நோக்காவது, "யாதானும் ஒன்றைத் தொடுக்குங் காலத்துக் கருதிய பொருளே முடிக்குங்காறும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை" எனவும், அடிநிலைகாறும் என்ற தல்ை ஒரடிக்கண்ணும் பலவடிக்கண்ணும் நோக்குதல் கொள்க’ எனவும், அஃது ஒரு நோக்காக ஒடுதலும் பல நோக்காக ஓடுதலும் இடையிட்டு நோக்குதலும் என மூவகைப் படும் எனவும் கூறுவர் இளம்பூரணர். நாற் சொல்லாலாய உலகியல் வழக்கினைப் பாவின்கண் அமைப்பது மரபென மேற்கூறிய ஆசிரியர், அங்ங்ணம் அமைக் குங்கால் வழக்கியல் போன்று வெள்ளேமை கலவாது, அரும் பொருள்களைத் தன்னகத்தே கொண்டு, அப்பொருளை உய்த் துணர்தற்குக் கருவியாகிய நோக்கென்னும் உறுப்புடையதாய்