பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 235 காப்பக் குற்றந்தீர்ந்த செல்வத்தோடு வழிவழியாகச் சிறந்து பொலிமின் என வாழ்த்தும் புறநிலை வாழ்த்து கலிப்பா வகை யினும் வஞ்சிப்பாவினும் வருதல் இல்லை. வாயுறை வாழ்த்தும், அவையடக்கியலும் செவியறிவுறுத்தற் பொருளும் கலிப்பா விலும் வஞ்சிப்பாவிலும் வரப்பெரு.” வாயுறை வாழ்த்தாவது வேம்பினையும் கடுவினையும் போன்ற கடுஞ்சொற்களைத் தன்னகத்துக் கொள்ளாது, வருங்காலத்திற் பெரும்பயன் விளக்குமென்ற நல்ல நோக்கத்துடன் பாதுகாவற் சொல்லால் மெய்யறிவித்தலாகும். முனிவரை வாழ்த்துதலும் ஏனேயோரை வாழ்த்துதலும் ஆகிய பாகுபாட்டினேக் குறிக்கும் என்பர் இளம்பூரணர். ‘வாழ்த்துங்கால் தனக்குப் பயன்படுதலும் படர்க்கைப் பொருட்குப் பயன்படுதலும் என இரு வகையான் வாழ்த்து மென்பது உம், இனி முன்னிலே யாக வாழ்த்துதலும் படர்க்கையாக வாழ்த்துதலும் என இரு வகைப்படு மென்பது உம் எல்லாங் கொள்க. அங்ங்னம் வாழ்த்தப் படும் பொருளாவன:- கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் நாடும் மழையும் என்பன. அவற்றுள் கடவுளே வாழ்த்துஞ் செய்யுள் கடவுள் வாழ்த்தெனப்படும். ஒழிந்த பொருள்க்ளே வாழ்த்திய செய்யுள் அறுவகை வாழ்த்தெனப் படுமென்பது, வாழ்த் தியல் என்ற தஞன், இயற்கை வாழ்த்தெனப்படுவன. இவையென வும், இனி வரும் புற நிலே வாழ்த்து முதலிய ஒரு வகையான் வாழ்த்தின்பாற் சார்த்தி புணரப்படுதலல்லது இயற்கை வாழ்த் தெனப் படா எனவுங் கொள்க’ என்பர் பேராசிரியர். 1. தெய்வத்தைப் புறம் நிறுத்தி வாழ்த்துதலின் புறநில் வர்ழ்த்தாயிற்று. புதல்வரொடும் சுற்றத்தார் நண்பர் முதலியவர் களோடும் கூட்டி வாழ்த்துதல் மரபென்றற்கு நிற்புறங் காப்ப? என ஒருமை கூறிப் பொலிமின்’ எனப் பன்மை கூறினர். 2. எனவே வெண்பாவிலும் ஆசிரியப்பாவிலும் வரப்பெறும் என்பதாம். 3. வர்ய்-வாய்மொழி, உறை-மருந்து; வாயுறை யென்பது சொன் மருந்து (சொல்லாகிய மருந்து) எனப் பண்புத் தொகை யாம். இனி, வாய்க்கண் தோன்றிய மருந்து என வேற்றுமைத் கிதாகையுமாம். மருந்து போறலின் மருந்தாயிற்று.