பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 தொல்காப்பியம் நுதலியபொருள் அவையடக்கியல்’ என்பது விளங்க அறிவிக்குந் திற மில்லாதனவற்றைச் சொல்லினும் அவற்றை வகைப்படுத்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்வீராக என இவ்வாறு எல்லா மாந் தர்க்கும் தாழ்ந்து கூறுதல். செவியுறையாவது, பெரியோர் நடுவண் பெருக்கமின்றித் தாழ்ந்தொழுகுதல் கடன் எனச் செவியறிவுறுத்தலாகும்.” ஒத்தாழ்ந்த ஓசையும். மண்டலித்துவரும் யாப்பும், (இரு சீரும் முச்சீருமாகிக் குறைந்து விரும் குட்டமும்’ நாற்சீரடிக்குப் பொருந்தின என்பர். எருத்தடி' குட்டமாய் (குறைந்து முச் சீராய்) வருதலும் உண்டு. மண்டிலம், குட்டம் என மேற்கூறி யவை இரண்டும் ஆசிரியப்பாவின் கண்ணே பயில நடக்குந் தன்மையனவாம். ஆசிரியப்பாவாவது, பெரும்பான்ம்ை இயற்சீரானும் ஆசிரிய வுரிச் சீரானும் ஆசிரியத் தளையானும் அகவலோசையானும், நாற். 1. அவையடக்கியல். அவையை வாழ்த்துதல். அவையடக்கு தல் என்பது இரண்டாம் வேற்று மைத் தொகை, அடக்கியல் என்பது வினைத்தொகை . தான் அடங்குதல்ாயின் அடங்கியல் எனல் வேண்டும்; அஃதாவது அவையத்தார்...அடங்குமாற்ருல் அவரிைப் புகழ்தல் என்பர் பேராசிரியர், 2. செவியறிவுறுTஉ-செவிக்கண் அறிவுறுத்துவது. இது செவி யுறை எனவும் கூறப்படும். செவியுறை-செவி மருந்து, இஃது ஒப்பிளுகிய பெயர். செவியறி வுறுத்த வண்ணம் அடங்கி யொழு குவோர் புகழொடும் நெடுங்கால்ம் நிலைபெற்று வாழ்தல் இயல்பாத லின் இது வாழ்த்தின் பாற்பட்டது. 3. குட்டம் என்பதற்குத் தரவு எனப் பொருள் கொண்டார் இளம்பூரணர். இருசிாடியும் முச்சீரடியுமாய்க் குறைந்து வருவன வற்றையே குட்டம் என வழங்குதல் ஆசிரியர் கருத்தாமென்பது பின்வரும் சூத்திரங்கனால் இனிது விளங்கும். 4. ஈண்டு, 'எருத்து’ என்றது தரவை; அஃது எருத்தே கொச்சகம் (செய்.146) என்பதனுைணர்க’’ என்பர் நச்சிஞர்க் கினியர். ஆசிரியர் எருத்து என்னுது எருத்தடி யெனக் கூறு தலால் ஈற்றயலடி எனப் பொருள் கொள்ளுதலே ஏற்புடைய தாகும்,