பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 237 சீரடியானும் சிறுபான்மை ஒழிந்த சீரானுந் தளையானும் அடியா னும் வருவது. ஈற்றயலடி முச்சீரான் வருவது நேரிசையாசிரியம் எனவும், இடையிடை முச்சீர்வரின் இணைக்குறளாசிரியம் எனவும், எல்லாவடியும் நாற்சீரடியாகி ஒத்து வருவது நிலைமண்டில வாசிரியம் எனவும், யாதானும் ஒரடியை முதலும் முடிவுமாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் வழுவாது எல்லாவடியும் ஒத்துவரும் பாட்டினை அடிமறி மண்டிலவாசிரியம் எனவும் அடி நிலையாற் பெயரிட்டு வழங்கப்படும் என்பர் இளம்பூரணர். இனி, முச்சீரடி முதலாக அறுசீரடி யீருக மயங்கிய ஆசிரியத் தினை அடி மயங்காசிரியம் எனவும், வெண்பாவடி மயங்கிய ஆசி ரியத்தினை வெள்ளடி மயங்காசிரியம் எனவும், வஞ்சியடி மயங்கிய ஆசிரியத்தினை வஞ்சி மயங்காசிரியம் எனவும் வழங்கப்படும். இவற்றுக்குரிய இலக்கணமாக இவ்வியல் 59, 60, 61, 104-ஆம் சூத்திரப் பொருள்களைக் கொள்ளலாம் என்பது உரையாசிரியர் கருத்தாகும். நெடுவெண் பாட்டு, குறுவெண் பாட்டு, கைக்கிளே, பரி பாட்டு, அங்கதச் செய்யுள் எனச் சொல்லப்பட்டவையும் அளவு ஒத்தவையும் எல்லாம் வெண்பா யாப்பின என்பர் தொல் காப்பியர். வெண்பா யாப்பாவது, வெண்சீரானும் இயற்சீரானும் வெண்டளேயானும் செப்பலோசையானும் அளவடியானும் முச் சீரீற்றடியானும் வருவது. இவையெல்லாம் ஒசையான் ஒக்கு மாயினும் அளவானுந் தொடையானும் பொருளானும் இனத்தா னும் வேறுபடுத்திக் குறியிடுகின்றர். இவ்வாசிரியர், நான்கினை அளவென்றும், நான்கின் மிக்கவற்றை நெடில் என்றும், குறைந்த வற்றைக் குறள் சிந்து என்றும் வழங்குவராகலின், இவற்றுள் பொருளாலும் இனத்தாலும் வேறுபடுக்கப்படாத வெண்பாக்கள்