பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் £39 தான்கடியால் வருவன. இவை அளவியல் வெண்பா' எனவும் வழங்கப்படுவன. "ஒரு பொருள் நுதலிய வெள்ளடி யியலாற் றிரியின்றி முடிவது கலிவெண் பாட்டே' - (செய்யுளியல்-147) என ஆசிரியர் ஒதினமையாற் புணர்தல் முதலாகிய பொருள் களுள் யாதானுமொரு பொருளைக் குறித்துத் திரியின்றி முடியும் பஃருெடை வெண்பாவினைக் கலிவெண்பா எனவும், குறள் வெண்பா முதலிய எல்லா வெண்பாக்களும் கொச்சகக் கலிக்கு உறுப்பாய்வரின் கொச்சகம் எனவும், பரிபாடற்கு உறுப் பாய்வரின் பரிபாடல் எனவும் கொள்ளப்படும் என்பர் இளம் பூரணர். ‘இனி ஒரு பொருள் நுதலாது திரிந்து வருங் கலி வெண்பாட்டும் ஈண்டுக்கூறிய நெடுவெண் பாட்டோடு ஒரு புடையொப்புமை யுடைமையின், அக் கலிவெண்பாட்டாக இக் காலத்தார் கூறுகின்ற உலாச் செய்யுளும் புறப் புறக்கைக்கிளைப் பொருட்டாதல் ஒன்றென முடித்தல் என்னும் உத்தியாற் கொள்க. அவ் வுலாச் செய்யுள் இரண்டுறுப்பாயும் வெண்பாவிற் கெட்டும் வருதலிற் கலிவெண்பாவின் கூருமாறு ஆண்டுக்கூறுதும். இக்காலத்து அதனை ஒருறுப்பாகச்செய்து செப்பலோசையாகவுங் கூறுவர். அது துள்ளலோசைக்கே ஏற்குமாறுணர்க” என வரும் நச்சிஞர்க்கினியர் உரைப்பகுதி இங்கு நோக்கத்தகுவதாகும். கைக்கிளைப் பொருண்மை தான் வெண்பாவாக வருதலே யன்றி, முதலிரண்டடியும் வெண்பாவாகிக் கடையிரண்டடியும் ஆசிரியமாகி இருபாவிலுைம் வரவும் பெறும்." 1. இவ்வாறு வருவதனை மருட்பா என்ப இக்கருத்திருனே மேல் 'மருட்டாவேனே யிருசாரல்லது, தானிது வென்னுந் தன்மை யின்றே’’ (செய்-81) என ஒதினரென்று கொள்க.