பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 தொல்காப்பியம் நுதலியபொருள் பரிபாடல் முற்கூறியவாறே வெண்பா வுறுப்பான் வருதலே யன்றித் தொகை நிலையும் விரியுமாகக்கூறிய பாநான்கனுள் இன்னபா வென்றறியப்படும் இயல்வழியின்றிப் பொதுப்பட யாக்கப்பட்டு நிற்றற்கும் உரியதாகும் என்பர்." மேற்சொல்லப்பட்ட பரிபாடற் பாட்டானது, பொதுவாய் நிற்றலே பன்றிக் கொச்சகமும் அராகமும் சுரிதகமும் எருத்தும் என்று சொல்லப்பட்ட நான்கும் தனக்குறுப்பாகக் காமப்பொருள் குறித்து வரும் நிலையினதாகும்.” 'கொச்சகம் என்பது ஐஞ்சீரடுக்கி வருவனவும் ஆசிரியவடி வெண்பாவடி, வஞ்சியடி, கலியடி, சொற்சீரடி, முடுகியலடி என்று சொல்லப்பட்ட அறுவகையடியானும் அமைந்த பாக்களே உறுப்பாக வுடைத்தாகி வெண்பாவியலாற் புலப்படத் தோன்று வது' எனவும், இதனுட் சொற்சீரடியும் முடுகியலடியும் அப் பா நிலைமைக்குரியவாகும் என வேறு ஒதலின் ஏனே நான்கும் கொச்சகப் பொருளாகக் கொள்ளப்படும்" எனவும் கூறுவர் இளம்பூரணர். 'கொச்சகம் என்பது ஒப்பிகிைய பெயர்; ஓர் ஆடையுள் ஒரு வழி யடுக்கியது கொச்சகம் எனப்படும்; அதுபோல ஒரு செய்யுளுட் பலகுறள் அடுக்கப்படுவது கொச்சகம் எனப்பட்டது. என்பர் பேராசிரியர். 1. பொதுப்பட யாக்கப்பட்டு நிற்றலாவது, ஆசிரியம், வஞ்சி வெண்பா,கலி,மருட்பா என்ருேதப்பட்ட எல்லாப்பாவின் உறுப்பும் உடையதாதல். 2. காமப் பொருள் குறித்து வருவது பரிபாடல் என வே. அறத்தினும் பொருளினும் அத்துணைப் பயின்று வாராதென்பது கருத்தாயிற்று. ‘வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே' எனச் சிறப்பு விதியோதினமையால், நான்கு பாவினும் பரிபாடல் வெண்பா யாப்பிற்ருதலின் கடவுள் வாழ்த்தாகியும் வரப்பெறும் என்பர் இளம்பூரணர்,