பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 243 அவற்றுள், தரவாவது நாலடி இழியாகப் பன்னிரண்டு அடி உயர்பாக இடைவரும் அடியெல்லாவற்ருனும் வரப்பெறும். தாழிசைகள் தரவிற் சுருங்கி வருவன." அடைநிலைக் கிளவியாகிய தனிச்சொல் தாழிசைப் பின்னர் நடத்தலைப் பயின்று வரும். போக்கியல் வகையாகிய சுரிதகம் வைப்பு எனவும் வழங்கப் படும். அது. தரவோடு ஒத்த அளவினதாகியும் அதனிற் குறைந்த அளவினதாகியும்" குற்றந்தீர்ந்த பாட்டின் இறுதி நிலையை யுரைத்துவரும். 1. பாட்டின் முகத்துத் தரப்படுதலின் தரவு என்பது பெயரா யிற்று. இதனே "எருத்து என வழங்குவதும் உண்டு. 'முகத்திற் படுந்தரவினே முகம் எனவும், இடை நிற்பனவற்றை இடைநிலே யெனவும், இறுதிக்கண் முரிந்து மாறுஞ் சுரிதகத்தினே முரிநிலே யெனவும் வழங்குவர் கூத்த நூலார். 2. தாழிசை தர வகப்பட்ட மரபின’ என்ற தல்ை, தரவிற்கு ஒதப்பட்ட நான்கடியின் மிகாது என்பதும், மூன்றடியானும் இரண்டடியானும் வரப்பெறும் என்பதும், ஒத்து மூன்ருகும் ஒத்தாழிசையே எனப் பின்னர்க் கூறுதலானும் இப்பாவினே ஒத் தாழிசைக் கலியெனக் கூறுதலானும் தாழிசை ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும் என்பதும் கொள்க என்பர் இளம்பூரணர். 3. அடைநிலை யென்பது, முன்னும் பின்னும் பிறவுறுப்புக்களே அடைந்தன்றி வாராது; அது தனி நின்று சீராதலின் தனிச்சொல் லெனவும்படும். 4. சுரிதகமாவது, உள்ளுறுப்பின் பொருளெல்லாம் ஒரு வகை யான் அடக்கிக் கூறுதலின் அடக்கியல்’ எனவும், குறித்த பொருளே முடித்துப் போக்குதலின் போக்கு எனவும், அவை யெல்லாம் போதந்து வைத்தலின் வைப்பு’ எனவும், கூறிய பகுதியைப் பின்னும் பற்றிக் கூறுதலின் வரிரம்’ எனவும் வழங்கப்படும். 8. தரவியலொத்தலாவது சிறுமை நான்கடி பெருமை பன்னி ரண்டடியாகி வருதல், 6. அதன கப் படுதலாவது, சிறுடிை மூன்றடியானும் இரண் டடியானும் வருதல்.