பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 தொல்காப்பியம் நுதலிய பொருள் ஒத்தாழிசைக் கலிவகை யிரண்டனுள், இரண்டாம் வகையினதாகிய செய்யுள், முன்னிலையிடமாகத் தேவரைப் பராவும் பொருண்மைத்து. தேவரிடத்து முன்னிலைப் பரவலாகிய அதுதான், வண்ணகம் எனவும் ஒருபோகு எனவும் இரு வகைப்படும். வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா தரவு, தாழிசை, எண்' வாரம் எனச் சொல்லப்பட்ட நான்குறுப்பினை யுடையதாகும். அதற்குத் தரவு, நான்கும் ஆறும் எட்டுமாகிய நேரடி”யில்ை 1. எனவே, இஃது அகநிலைச் செய்யுள் ஆகாதென்ருன்; இதனுனே முன்னேயது அகநிலே யொத்தாழிசை யெனப்படும்’ என்பர் பேராசிரியர், தேவரைப் பரவுதலாகிய இது, முன்னிலேக் கண் வருமென வே, முன் வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு முரித்தே என்ற வாழ்த்தியல் நான்கு கலிக்கும் எய்திற்றே னும் அவை தெய்வத்தினே முன் னிலேயாகச் சொல்லப்பட்ட ன அன்மை யின் தேவபாணி ஆகாவாயின. 'யான் இன்ன பெருஞ் சிறப்பின் இன்ன தெய்வம்’ என்று தன்னேத்தான் புகழ்ந்து கூறி, "நின்னேக் காப்பேன்; நீ வாழிய” எனத் தெய்வம் சொல்லியதாகச் செய்யுள் செய்தலும் ஆகாது. தெய்வம் படர்க்கையாய வழிப் புற நிலே வாழ்த்தாவதன் றித் தேவர்ப் பராயிற்ருகாது. இங்ங்னம் கூறவே அகநிலை யொத்தாழிசைக்கலி யல்லாத ஒழிந்த ஒத் தாழிசைக்கலி முன்னிலேக்கண் வருவதாயின் தேவரைப் பரவு தலாகிய பொருளிலேயே வரும் என்பது நன்கு பெறப்படும். 2. வண்ணித்துப் புகழ்தலின் வண்ணகம் எனப்படும்; என்னே? தரவிஞனே தெய்வத்தினே முன்னிலேயாகத் தந்து நிறீஇப் பின்னர் அத் தெய்வத்தினே தாழிசையாலே வண்ணித்துப் புகழ் தலின் அப்பெயர் பெற்றதாகலின் . ஒழிந்த வுறுப்பான் வண்ணிப் பினும் சிறந்த வுறுப்பு இதுவென்க... எண்ணுறுப்புத் தான் நீர்த் திரை போல வர வரச் சுருங்கி வருதலின் அம போதரங்க மெனவும் அமையுமாதலின் அதனே அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா எனவுஞ் சொல்லு, இனி, வண்ணகமென்பது, அராகமென உரை த்து அவ்வுறுப்புடையன வண்ணக ஒத்தாழிசை எனவுஞ் சொல்வாருமுளர். எல்லா ஆசிரியருஞ் செய்த வழிநூற்கு இது முதனூலாதலின் இவரோடு மாறுபடுதல் மரபன்றென மறுக்க... மற்றிதற்குத் தனிச்சொல் ஒதியதில்லேயாலெனின் அதனே அதிகாரத் தாற் கொள்க’ என்பர் பேராசிரியர். 3. நேரடி பற்றிய நிலைமைத்தாகும்’ என்பதற்கு, அளவடி யால் வரும் எனப் பொருளுரைத்தார் இளம்பூரணர்; சமநிலையா னன்றி வியனிலையான் வாராது எனப் பொருள் கொண்டார்