பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 தொல்காப்பியம் நுதலியபொருள் முதலியன. இது, தாவொடுபட்ட தாழிசை யிலக்கணமின்றி வேருய் வரும் என்றற்குத் தரவின்ருகி எனத் தரவை விலக் கினர். எனவே, இவை ஒத்து மூன்ருதலும், தரவிற் சுருங்கி நான்கும் மூன்றும் அடிபெறுதலும், ஒருபொருள்மேல் வருதலும், தாழம்பட்ட ஒசையவேயாதலும் கடப்பாடின்று என்றவாரும். அங்ங்னங் கூறியவதனனே பரணியுளெல்லாம் ஈரடியானே வருத லும், தாழம்பட்ட வோசையல்லன விராஅய் வருதலும், முடுகி வருதலும், இனித் தாழிசை மூன்றடுக்கித் தனியே வருவழி ஈரடி முதலிய பலவடியான் வருதலும், இனி, பத்தும் பதினென்றும் பன்னிரண்டுமாகி ஒரு பொருள்மேல் வரும் பதிகப்பாட்டு நான்கடி யின் ஏருது வருதலும், அங்ங்ணம் வருங்கால் தாழ்ந்தவோசை பெற்றும் பெருதும் வருதலும், அவை இருசீர்முதல் எண்சீரளவும் வருதலும் என்று இன்ளுேரன்ன பல பகுதி யெல்லாம் வரையறை யின்றித் தழுவப்பட்டன. இவ் வேறுபாடெல்லாம் உளவேனும் தாழம்பட்ட வோசை பெரும்பான்மைய வாதலின் தாழிசை யென்ருர். இங்ங்னம் தாழிசைப்பேறு விதந்தோதவே ஒழிந்த வுறுப்பெல்லாம் விலக்குண்டமை பெற்ரும். ஆகி யென்றதனுன் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருத லும், தேவபாணி யன்றி யாப்பினும் வேறுபட்டு வருவனவற்றின் கூருய் அங்ங்ணம் முன்றடுக்கி வாராது தொடர்ந்த பொருளாய் நான்குமுதற் பலவும் அடுக்கி வருதலும், தனிச்சொற் பெற்று வருதலும், தாழம்பட்ட வோசையின்றி மூன்றடுக்கி வருதலும், 1. “பதிகப் பாட்டிற்கு ஈண்டுக் கூறிய வேறுபாடுகள் திருவாய்மொழி, திருப்பாட்டு, திருவாசகம் என்கின்ற கொச்சக வொருபோகுகளிற் காண்க. அவை உலக வழக்கன் மையிற் காட்டா மாயினும்’ என நச்சிர்ைக்கினியர் குறிப்பிடுதலால், இறைவனருள் பெற்ற பெரியோர்கள் அருளிச்செய்த திருப்பாடல்களாகிய அவை, தொல்காப்பிய இலக்கணத்தின்படி கொச்சக வொருபோ கென்னும் பாவின்பாற்படுவன என்பதும் அங்ங்னமாயினும் திருப்பாடல் களாகிய அவற்றை ஏனேச் செய்யுட்களைப் போல இங்கு யாப்பிய லமைதிக்கு உதாரணமாக எடுத்துக் காட்டுதல் மரபன்றென்பதும் நன்கு தெளியப்படும்.