பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 தொல்காப்பியம் துதலியபொருள் வருதலும் பெற்ரும். இக்கருத்தறியாதார். வெண்பாவியலாற் பண்புற முடியும் கலியடி யுடையதனை வெண்கலிப்பா என்பர்." 'யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது' என்பது, மேற்கூறியவாறும் இனி வருகின்றவாறும் இன்றியாப்பின் வேறு படுதலும் பொருளின் வேறுபடுதலும் என்றவாறு. அவை, இருசீர் முதல் எண்சீர் காறும் வந்த அடி மேற்கூறியவாறன்றி நந் நான்கே பெற்று வருவனவும். அவற்றுட்பிறவடி விரவி வருவன வும், பலவடி வந்தும் நான்கடி வந்தும் பா மயங்கிவருவனவும், இனி, 'ஈரடியான் வருவனவற்றுள் ஈற்றடி மிக்கும் குறைந்தும் குறையாதும் வந்து இயலசைச்சீர் பெற்று வருவனவும், ஓசையும் பொருளும் இனிதாகாது வருவனவும் இரண்டடிச் செய்யுள் முடிந்து நிற்கவும் ஈற்றடி ஒன்றும் இரண்டும் மிக்கு வருவனவும், பிறவாருய் வருவனவும், இனி, முவடியான் வருவனவற்றுள் ஈற்றடிகுறைந்தும் முதலடிமிக்கும் இடையடி குறைந்தும் இறுதியடி மிக்கும் மூன்றடியிற் குறையாதும் பிறவாருயும் வருவனவும், இம் முவடி இற்றபின் ஈற்றடி ஒன்றும் இரண்டும் மிக்கு வருவனவும் பிறவாருய் வருவனவும், இனி. நான்கடியாய் வருவனவற்றுள் முதல் இடை கடையிற் குறைந்து வருவனவும், முதல் இடை கடைக்கண்ணே ஒரடியும் ஈரடியும் சீர்மிக்கு வருவனவும் பிற வாருய் வருவனவும், நான்கடி யிற்றபின் ஈற்றடி ஒன்றும் இரண்டும் சீர்மிக்கு வருவனவும், இங்ங்னம்மிக்கு பத்தடுக்கி ஒரு 1. 'தன்றளேயோசை தழுவிநின் liற்ற டி வெண்பா வியலது கலிவெண் பாவே' {யாப்பருங்கலம் செய். 85) எனவும் , "வெண்டளே தன்றளே யென்றிரு தன்மையின் வெண்பா வியலது வெண் கலியாகும்’ (யாப்.செய்.85-மேற்கோள்) எனவும் வருவன இங்கு நினேக்கத் தக்கன.