பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 353 என இவ்வாறு மூன்றடியாய், ஒரு பொருள்மேல் முன்றடுக்கி வருவனவற்றை ஆசிரியத் தாழிசை யென்றும், இனி இதுவே நான்கடியாய் வரிற் கலிவிருத்த மென்றும் கூறுவர் பின்வந் தோர். கன்று குணிலா என்ற பாடலில் வெண்டளை அமைந் திருத்தலால் இதனை வெண்டாழிசையெனக் கூறுதற்கும் இட முண்டு. எனவே இதனை ஒரு தலையாக ஆசிரியத்திற்கு இன மாக்கி யுரைத்தல் பொருந்தாது.

  • நெருப்புக் கிழித்து விழித்ததோர் நெற்றி யுருப்பிற் பொடிபட் டுருவிழந்த காமன் அருப்புக் கணையான் அடப்பட்டார் மாதர் விருப்புச் செயநின்னே விரும்புகின் ருரே '

என நான்கடியான் வருவதனைக் கலிவிருத்த மெனின், இதன் கண் வெண்டளே அமைந்திருத்தலால் இதனை வெண்டாழிசை யெனினும் குற்றமாகாது. அன்றியும் கலித்தளையே யில்லாத இப்பாடல் கலிப்பாவிற்கு இனமாதல் பொருந்தாது. இனி, குறளடியானும் சிந்தடியானும் வருவனவற்றைச் சீரளவு பற்றி வஞ்சிப்பாவிற்கு இனமாக்கியுரைப்பர் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள். அவை சீரளவால் ஒப்பினும் அடி நான்காய் வருதலானும் 'பா' என்னும் ஒசை வேறுபடுதலானும் அவற்றை வஞ்சிப்பாவிற்கு இனமாக்கி யுரைத்தல் பொருந்தாது. அன்றியும் குறளடிச் செய்யுள் மூன்றுவரின் வஞ்சித் தாழிசை யெனவும் சிந்தடிச் செய்யுள் மூன்று வாரா எனவும் கூறின், அங்ங்ணம் அவை மூன்றடுக்கி வருதற்கும் வாராமைக்கும் தக்க காரணம் காட்டல் அரிது. பிறவும் இவ்வாறு ஒரு பாவிற்கு இன மென வகுக்கப்பட்டவை மற்ருெரு பாவிற்கும் இனமாம் எனக் கொள்ளுமாறு அமைந்திருத்தலால் இவற்றை இன்ன பாவிற்கு இனமாம் என வரையறைப் படுத்துதல் பொருந்தாதெனவும், இங்ஙனம் இனஞ் சேர்த்துதற்கு அரியனவாயினும், இவை