பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 தொல்காப்பியம் நுதலியபொருள் பெரும்பான்மையும் கலிப்பாவிற்கு ஏற்ற ஓசையே பெற்று வருவன வாதலின், முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி நூல் செய்த ஆசிரியர் தொல்காப்பியனர் இவை யெல்லாவற்றுக்கும் ஒரு பரிகாரங் கொடுத்துக் கொச்சகத்துள் அடக்கினர் எனவும் அதுவே தொன்றுதொட்டு வந்த யாப்பியல் மரபெனவும் பேராசிரியரும் நச்சினர்க்கினியரும் தக்க காரணங்காட்டி விளக்கி யுள்ளார்கள். 'அடக்கியலின்றி அடிநிமிர்ந் தொழுகும்' என மேற்சொல்லப் பட்ட கொச்சக வொருபோகு பத்தடிச் சிறுமையாகவும் இருபதடிப் பெருமையாகவும் வரும். அம்போதரங்க வொருபோகு அறுபதடி பெருமைக்கு எல்லை யாகும். அதன் செம்பாதியிற்பாதி (பதினைந்தடி) சிறுமைக்கு எல்லையாம். அம்போதரங்க வொருபோகாகிய அச்செய்யுள் எருத்து. கொச்சகம், அராகம், சிற்றெண் அடக்கியல் வாரம்' என்னும் இவ்வுறுப்புக்களையுடையது என்பர் தொல் காப்பியர். 1. ஈண்டு, எருத்து என்பது தரவு, என்பர் இளம்பூரணர். 2. அராகம் என்பது அருது (இடையறவு படாது) கடுகிச் செல்லுதல். மாத்திரை நீண்டும் இடையறவு பட்டும் வராது குற் றெழுத்துப் பயின்று வந்து நடைபெறுவது அராகம் என்னும் உறுப்பாகும். 3. அம்போதரங்கச் செய்யுளுக்குரிய நால்வகை எண்ணுறுப் புக்களுள் இறுதி யெண்ணுய்ச் சிறுகிவரும் எண் “சிற்றெண்' எனப்படும். இது 'சின்னம், எனவும் கூறப்படும். 4. அடக்கியல் வாரம் என்பது, தரவு முதலாகச் சொல்லப் பட்ட வுறுப்புக்களில் விரித்துக் கூறிய பொருளே அடக்கும் (முடித்துக் கூறும்) இயல்பினதாகிய சுரிதகம் என்னும் உறுப் பாகும். "சுரிதகமாவது ஆதிப்பாட்டினும் இடைநிலைப் பாட்டினும் உள்ள பொருளைத் தொகுத்து முடிப்பது' என்பர் இளம்பூரணர். 5. எருத்து முதலாகச் சொல்லப்பட்ட இவ்வுறுப்புக்களே பரிபாடற்கும் உறுப்பாமாயினும், இவை இம்முறையேவரின் அம்போதரங்க வொரு போகாம் எனவும், அறுபதடியிற் குறைந்து