பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 தொல்காப்பியம் நுதலியபொருள் ஒரு பொருள் நுதலிய எனவே சொல்லப்படும் பொருளின் வேருகிக் கருதியுணரப்படும் பொருளுடைத் தென்பது பெற்ரும். "இயல் என்றதன்ை வெண்பாவிலக்கணஞ் சித்ையாத வற்றுக்கே ஒருபொருள் நுதலவேண்டுவதெனவும், அவ்வாறன்றித் திரிந்து வருவன வெல்லாம் ஒருபொருள் நுதலாக் கலிவெண்பாவாம் எனவும் கூறியவாறு' எனப் பேராசிரியரும், “இதன்ை ஒரு பொருள் நுதலியது கட்டளையாய்த் திரிவின்றி வருமெனவும், ஒரு பொருள் நுதலாதது சீர் வகையாய்த் திரிவுடைத் தாய் வருமென வும், கூறிற்ரும். வெண்பாவாயின் குறித்த பொருளை மறைத்துக் கூருது செப்பிக்கூறல் வேண்டும்; இஃது அன்னதன்றிப் பொருள் வேறுபடுதலானும் துள்ளிவருதலானும் கலிவெண்பாட்டாயிற்று' என நச்சிஞர்க்கினியரும் கூறிய விளக்கங்கள் இங்குக் கருதத் தக்கனவாம். "புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனவும் கைக்கிளை பெருந்திணை எனவும் சொல்லப்பட்ட பொருள் ஏழ னுள்ளும் யாதானும் ஒரு பொருளேக் குறித்து ஏனைக் கலிப்பாக் கள் போலத் தரவும் தாழிசையும் தனித்தனி பொருளாக்கிச் சுரிதகத்தால் தொகுத்து வரும் நிலைமைத்தன்றித் திரியின்றி முடிவதனைக் கலிவெண்பா எனவும், புறப்பொருட்கண்வரும் வெண்பாக்களைப் பஃருெடை வெண்பா எனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரும் பஃருெடை வெண்பாக்களைப் பரிபாடல் என வும், கொச்சகக் கலிப்பாவிற்கு உறுப்பாய் வரும் பஃருெடை வெண்பாவைக் கொச்சகக் கலிப்பா எனவும் கூறுதல் இவ்வாசி ரியர் (தொல்காப்பியனுர்) கருத்தென்று கொள்க’ என இளம் பூரண அடிகள் விளக்குதலால், முற்கூறிய நெடுவெண்பாட் டாகிய பஃருெடை வெண்பாவிற்கும் இக்கலி வெண்பாட்டிற்கும் இடையேயமைந்த வேறுபாடு இனிது புலனுதல் காண்க. தரவாகிய உறுப்பும் சுரிதமாகிய உறுப்பும் இடையிடை வந்து தோன்றியும், ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்