பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 257 பாவின் இயல்பினுற் புலப்படத் தோன்றும் பா நிலவகை கொச் சகக் கலிப்பாவாகும். இதன் இயல்பினை, " தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும்’ ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய் பெற்றும்* வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகையே கொச்சகக் கலியென நூல் நவில் புலவர் நுவன்றறைந் தனரே' என வரும் நூற்பாவில் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். 'ஒத்தாழிசைக் (கலிக்குத் தாழிசையாகிய உறுப்பு மிக்கு வந்தாற்போலக் கொச்சகக் கலிக்கும் வெண்பாவாகிய உறுப்பு மிக்கு வரும் என்று கொள்க’ என இளம்பூரணர் கூறுதலால், ஒத்தாழிசைக் கலியின் வகையாய்க் கலியோசை தழுவிய கொச்சக வொருபோகும் வெண்பாவியலால் வெளிப்பட முடியும் கொச்சகக் கலியும் தம்முள் வேறெனப் பகுத்துணர்தல் வேண்டும். இனி, இதற்கு இவ்வாறு பொருள் கொள்ளாது இதன் முதல் மூன்றடியும் ஒரு சூத்திரமாகவும் பின்னிரண்டடியும் 1. "பாட்டை மிடைந்தும் என்பது, பேராசிரியரும் நச்சினர்க் கினியரும் கொண்ட பாடம், 'மிடைந்தும்’ என்ற உம்மையால் தரவும் சுரிதகமும் இயற்கை வழாமல் முதலும் முடிவும் வருதலும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். 2, 3 ஐஞ்சீரடுக்குதல் என்றது, ஐஞ்சீரடி பல வருதல் எனவும், ஆறுமெய் பெறுதல் என்றது, தரவு, தாழிசை, தனிச் சொல், சுரிதகம், சொற்சீரடி, முடிகியலடி அல்லது அராகம் என்னும் ஆறு உறுப்பினேயும் பெற்று வருதல் எனவும் கூறுவர் இளம்பூரணர். இனி, "ஐஞ்சீரடுக்குதல் என்றது, வேறு நின்ற தொரு சீரினே அளவடியுடன் அடுக்கிச் சொல்ல ஜஞ்சீராகி வருதல் என்றும், ஆறுமெய் பெறுதல் என்றது, அளவடியுடன் இருசிர் அடுக்க ஆறுசீர்பெற்று வருதல் என்றும், மேல் கூன்' எனவும் "சொற்சீர்’ எனவும் கூறப்பட்டனவே ஈண்டு ஜஞ்சிரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வந்தன வென்றும் கொள்வர் பேராசிரியர். 4. பெற்றும் என்ற உம்மையால் பெறுது வருதலும் கொள்க என்பர் இனம்பூரணர்.