பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 தொல்காப்பியம் நுதலியபொருள் மற்ருெரு சூத்திரமாகவும் கொண்டு, அவற்றுள் முன்னையது, வெளிப்படு பொருளினதாய் விரவுறுப்புடைய வெண்கலியின் இயல்புணர்த்திற்றென்றும், பின்னையது மேலே ஒருபோகெனக் கூறப்பட்ட கொச்சகப்பாநிலைவகையான அகநிலைக் கொச்சகக் கலியின் இயல்புணர்த்திற்றென்றும் பேராசிரியரும் நச்சினர்க் கினியரும் பகுத்து உரைகூறி விளக்கியுள்ளார்கள். அன்னேர் கருதுமாறு வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் என்னும் பயனிலைக்கு வெளிப்படு பொருட்டாகிய வெண்கலிப்பா என்பது எழுவாயாக வந்து இயைதற்கு இடமின்மையானும், வாநிலைவகையே கொச்சகக் கலி' என்புழிப் பாநிலைவகை யென்றது, இன்ன பாவினது நிலையும் வகையும் என்பது விளங்கும் வகையில் அத்தொடர்ப் பொருளை அறிந்து கொள்ளுதல் இயலாதாகலானும் இளம்பூரணர் கருதுமாறு இதனை ஒரு சூத்திரமாகக்கொண்டு, கொச்சகக் கலியின் இலக்கணம் உணர்த்திற்ருக உரை கூறுவதே தொல்காப்பியனர் கருத்துக்கு ஏற்புடையதாகும். இனி, யாப்பின் வேறுபட்ட கொச்சக வொருபோகு ஒப்பன வற்றுள், இருசீர் நான்கடித் தரவு கொச்சகம், முச்சீர் நான்கடித் தரவு கொச்சகம், நாற்சீர் நான்கடித் தரவு கொச்சகம் என்பன வும் அடங்குமெனவும், இனி, கோவையாக்கி எழுத்தெண்ணி அளவியற் படுத்துச் செப்பினும் அவையேயாம் எனவும் கூறுவர் பேராசிரியர். முன்னைச் சூத்திரத்தில் ஒரு பொருள் துதலி வருவது கலி வெண்பாட்டு' எனவே, ஒரு பொருள் நுதலாது வெளிப்படத் தோன்றும் கலிப்பாட்டின் உறுப்பொத்துத் தரவும் போக்கும் பாட்டும் இடைமிடைந்தும் பாட்டுக் கொச்சகமாயும் அவை ஐஞ்சீரும் அறுசீரும் அடுக்கி வருதலும் எல்லாங் கொள்ளப்படும் இவ்வாறு வந்தன வெண்பாவிற் சிதைந்து ஓசையும் பொருளும்