பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 தொல்காப்பியம் நுதலியபொருள் நெடுவெண் பாட்டிற்கு எல்லை பன்னிரண்டடி. குறுவெண் பாட்டிற்கு அளவு, அளவடியுஞ் சிந்தடியுமாகிய எழுசீராம் என்பர் தொல்காப்பியர். குறுமையும் நெடுமையும் அளவியலொடு படுத்துக் கொள்ளப் படுமாதலின், அளவியல் வெண்பாட்டும் உளவென்பதும், அதுவே சிறப்புடைய தென்பதும் பெறப்படும். நெடுவெண் பாட்டிற்குப் பேரெல்லே பன்னிரண்டடி யெனவே, அதனிற் பாதியாகிய ஆறடி அளவியல் வெண்பாவிற்கு உயர்ந்த எல்லை யெனவும், நெடுவெண்பாட்டின் சிற்றெல்லை ஏழடியென வும், அளவியல் வெண்பாவின் சிற்றெல்லை நான்கடியெனவும் கொள்ள வைத்தாராயிற்று. அளவியல் வெண்பாச் சிறப்புடைத் தாதல் நோக்கிப் பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள் ளாயிரத்துள்ளும் ஆறடியின் எருமற் செய்யுள் செய்தார் பிற சான்ருேரும். இக்கருத்தினுல் அம்மை யென்னும் வனப்புடைய செய்யுளுக்கு நெடுவெண்பாட்டு ஆகாதென விலக்குவார், 'அம்மை தானே அடி நிமிர் பின்று (செய்-227) என்ருர் தொல் காப்பியஞர். செப்பிக் கூறுஞ் செய்யுட்கு நான்கடியே மிக்க சிறப்புடைத்தெனவும், சிறப்புடைப் பொருளைப் பிற்படக்கிளத்தல்' என்பதல்ை குறுவெண் பாட்டும் (குறள் வெண்பாவும்) சிறப் புடைமை பெறுதும் எனவும் கூறுவர் நச்சிஞர்க்கினியர். அங்கதப் பாட்டாகிய வெண்பாவிற்கு எல்லை சிறுமை இரண்டடி, பெருமை பன்னிரண்டடி. கலிவெண் பாட்டும் கைக்கிளைப் பொருள் பற்றிய பாவும் செவியறிவுறுஉ, வாயுறை வாழ்த்து, புறநிலைவாழ்த்து என்ற பொருண்மைக்கண் வரும் வெண்பாக்களும் அளவு வரையறுக்கப்படா; பொருள் முடியு மளவும் வேண்டிய அடி வரப்பெறும். 1. கைக்கிளேச் செய்யுள் என்பது, கைக்கிளேப் பொருட்கு உரித்தாய் வரும் மருட்பா என்றவாறு.