பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 தொல்காப்பியம் நுதலியபொருள் அறிவின் நுட்பத்தைப் புலப்படுத்தும் நிலையில் சுருங்கிய சொல்லால் அமைந்து, புகழ் பயக்கும் உயர்ந்த கருத்தினைத் தன்னகத்தே கொண்டு, யாவரும் எளிதில் உணருமாறு கருதிய பொருளே முடித்தற்கு வரும் காரணத்துடன் பொருந்தி விளங்குவது முதுமொழி யென்பர் ஆசிரியர்." தாம் சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டும் குறைவின்றிப் பயன்தரச் சொல்லும் ஆற்றலுடைய நிறைமொழி மாந்தராகிய பெரியோர், இவ்வாறு ஆகுக' எனத் தமது ஆணையாற் சொல்லப்பட்டு, அவ்வாற்றலனைத்தையும் தன்கண் பொதிந்து வைத்துள்ள செறிவுடைய நன்மொழியே மந்திரம் எனப்படும். இதன் இயல்பினை, " நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” (செய்-17:) என்ற நூற்பாவில் ஆசிரியர் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார். இக்கருத்தே பற்றி ஆசிரியர் திருவள்ளுவனரும்,

  • நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்” என்றார். 'நிறைமொழி யென்பது, அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி என்பர் பரிமேலழகர். நிறைமொழி மாந்தராவார், இருவகைப் பற்றுக் t 1. முதுசொல், முதுமொழி, மூதுரை, பழமொழி என்பன ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும். சென்ற காலத்திற் புகழுடன் வாழ்ந்த பெருமக்களிடத்தமைந்த நுண்ணறிவு, சொல் வன்மை, உயர்ந்த நோக்கம், நல்வாழ்க்கை முறையில் அன்னேர் பெற்றிருந்த சிறந்த அனுபவங்கள் ஆகிய இவை யெல்லாவற்றையுந் திரட்டித் தருதல் இம் முதுமொழியின் இயல்பென்பது, முதுமொழி யென்னும் செய்யுள் வகைபற்றிய இவ்விலக்கணத்தால் இனிது விளங்கும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய பழமொழி நானூறு முதுசொல் என்னும் இச் செய்யுள் வகையின் பாற்படும்.