பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 265 களையும் நீக்கி ஐம்புலன்களையும் அடக்கி எவ்வுயிர்க்கும் அருளுடை யராய் வாழும் பெரியோர். ஆணையிற் கிளத் தலாவது, இஃது இவ் வாருகுக எனத் தமது ஆற்றல் தோன்றச் சொல்லுதல் ‘மறைமொழி-புறத்தார்க்குப் புலனுகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற்ருெடர்' என்பர் பேராசிரியர். இனி, மறைமொழி யென் பதற்கு, நிறைமொழி மாந்தரது ஆணையின் ஆற்றல் அனைத்தை யும் தன்னகத்தே மறைத்துக் கொண்டுள்ள மொழி எனப்பொருள் கொள்ளுதலும் பொருந்தும். இங்ங்னம் சான்ருேர் எண்ணிய வண்ணம் செயற்படுதற்குரிய ஆற்றல் முழுவதும் தன்கண் வாய்க் கப்பெற்ற மொழியே மந்திரம் எனப்படும் என்பார், அதனை "வாய்மொழி (செய்-75) என்ற பெயரால் முன்னர்க் கூறிப் போந்தார்.” இவை தமிழ் மந்திரம் என்றற்கும், மந்திரந் தானே பாட்டாகி அங்கதம் எனப்படுவனவும் உள, அங்கதப் பாட்டு 1. இறைவன் திருவருள் பெற்ற திருஞான சம்பந்தப் பிள்ளே யார், "எந்தை நனியள்ளியுள்க வினைகெடுதல் ஆணே நமதே' (2-84-1) எனவும், ஆனசொன் மாலேயோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணே நமதே (2.85.11) எனவும் தம் மேல் ஆணையிட்டும், "செய்வினே வந்தெமைத் தீண்டப்பெரு திருநீலகண் டம் (1.115-1) என் இறைவனது திருநீலகண்டத்தின் மேல் ஆணையிட்டும் ஒதிய திருப்பதிகங்கள், நிறைமொழி மாந்தரது ஆணேயின் ஆற்றலே நன்கு புலப்படுத்தி நிற்றல் காணலாம். 2. திருவாய்மொழி, திருமொழி என்ற பெயர்கள், 'வாய்மொழி' என்னும் இப்பெயர் வழக்கத்தை அடியொற்றி அமைந்தனவாகும். 3. 'ஆரியம் நன்று தமிழ்தி தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானேச்-சீரிய அந்தண் பொதியில் அகத்தியனர் ஆணையாற். செந்தமிழே தீர்க்க சுவா’ எனவும், 'முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி-யரணியல் ஆனந்த வேட்கையான் வேட்கேரிக் குயக்கோடயன் ஆனந்தஞ் சேர்க சுவா’ எனவும், இவை "தெற்கண் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார்