பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தொல்காப்பியம் நுதலியபொருள் அல்லாத மறைமொழியே மந்திரம் என ஈண்டுச் சிறப்பித் துரைக்கப்படும் என்றற்கும் ‘மறைமொழி தானே எனப் பிரித் துரைத்தார். எனவே சபித்தற் பொருட்டாகிய மந்திரச் செய்யுளை அங்கதப் பாட்டெனவும், வசைப் பொருட்டாகாது உலக நலங் குறித்து வரும் மறை மொழியினையே மந்திரம் எனவும் வழங்குதல் ஆசிரியர் தொல்காப்பியனர் கருத்தென்பது நன்கு புலம்ை. திருமூலநாயனர் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திர மாலே தொல்காப்பியனர் கூறிய இவ்விலக்கணத்தின்படி அமைந்த தமிழ் மந்திரங்களுக்குரிய சிறந்த இலக்கியமாகும். எழுத்தின் இயல்பினுலும் சொல்லின் தொடர்ச்சியாலும் புலப்படாது, சொல்லினல் உணரப்படும் பொருட்குப் புறத்தே பொருளுடைத்தாய் நிற்பது குறிப்புமொழி என்பர்." கவியாற் பொருள் தோன்ருது, பின்னர் இன்னது இது எனக் குறிப்பினுல் உய்த்துணர்ந்து சொல்ல வைத்தலின், இது குறிப்பு மொழியெனப் பட்டது. பாட்டிடைப் பொருள் பிறிதாகி அதனிடையே குறித்துக் கொண்டு உணரினல்லது இக்குறிப்புப் புலகைாதென்பார், இதனைக் கூற்றிடை வைத்த குறிப்பு’ (செய்யுளியல்-158) என்ருர் தொல்காப்பியர்ை. இதனைப் 'பொருளிசை யென வழங்குவர் ஒருசார் ஆசிரியர். 'குடத்தலேயர் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையின் அடக்கிய முக்கினராகும்" பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் (ஒருவன்) சாவவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின’ எனப் பேராசிரியர் காட்டிய அங்கதப் பாடல்கள் ஆணேயிற் கிளந்த மறைமொழியின் பாற் படுவன. 1. "மேல் அங்கதமென்று சொல்லி ஈண்டுக் குறிப்புமொழி என்றதன்ை இச்சொல் வசை குறித்து வருமென்று கொள்க: என்பர் இளம்பூரணர்.