பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 தொல்காப்பியம் நுதலியபொருள் மேற் சொல்லப்பட்ட களவு கற்பு என்னும் இருவகையே கைகோளாவன என்பர் ஆசிரியர். எனவே அகத்திற்குப் புறனயினும், புறத்திணைக்குக் கைகோள் அவ்வாறு வேறுவகைப் படக் கூறப்படா, பொதுவகையானே மறைந்த ஒழுக்கமும் வெளிப்பாடும் என இரண்டாகி அடங்கும் என்பர் பேராசிரியர். 15. கூற்று:- செய்யுள் கேட்டாரை இது கூறுகின்ருர் இன்னர் என உணர்வித்தல் கூற்று எனப்படும். இதன் கூறுபாடு இவ்வியல் 18-முதல் 187-முடியவுள்ள சூத்திரங் களால் விரித்துரைக்கப் பெறுகின்றது. பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, தலைவன், தலைவி எனச் சொல்லப்பட்ட கலந்தொழுகும் மரபினையுடைய அறுவகை யோரும் களவென்னும் ஒழுகலாற்றிற் கூற்று நிகழ்த்தற்கு உரியராவர். நன்றுந்தீதும் ஆராய்ந்து தலைமகற்கு உறுதிகூறுவான் பார்ப்பான் எனவும், அவ்வாறன்றித் தலைமகன்வழி ஒழுகுவான் பாங்கன் எனவும் கூறுவர் பேராசிரியர். பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் என்னும் அறுவரும் மேற்சொல்லப்பட்ட பார்ப்பான் முதலிய அறுவரும் ஆக இப்பன்னிருவரும் கற்பின்கண் கூற்று நிகழ்த் தற்கு உரியவராவர். தலைமகள் வாழும் ஒரே ஊரில் உள்ளவர்கள், அவளது அயல் மனையில் உள்ளார், சேரியில் உள்ளார், அவளது நோயின் கூறுபாட்டினைக் குறிப்பினுல் அறிவோர், தந்தை, தமையன் ஆகிய இன்னேர் கூற்ருகப் பிறர் கொண்டு கூறினல்லது இவர் தாமே கூறினராகச் செய்யுள் செய்தல் இல்லை.