பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தொல்காப்பியம் அவையின் கண்ணே, அறமே கூறும் நாவில்ை நான்கு மறை களையும் முற்றப் பயின்ற அதங்கோட்டாசான் என்னும் ஆசிரியர்க் குக் குற்றமறத் தெரிவித்து, முன்னை நூல்களிற்போல இயலும் இசையும் நாடகமும் ஆகிய மூன்று தமிழும் ஒன்ருேடொன்று கலந்து மயங்காதபடி, இயற்றமிழை வேறுபிரித்து முறைப்பட அறிவித்துக் கடல்சூழ்ந்த நிலவெல்லையிலே ஐந்திரவியாகரணத் தினை முற்றவுணர்ந்த தொல்காப்பியன் எனத்தன் பெயரைத் தோற்றுவித்தலால் பல புகழையும் இவ்வுலகத்தில் நிலைபெறுத்தின தவவொழுக்கத்தினை யுடையான்” என்பது மேற்காட்டிய சிறப்புப் பாயிரத்தின் பொருளாகும். தொல்காப்பியனுர் காலத் தமிழ் நாட்டெல்லை தொல்காப்பியனர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத் தொடரும் தெற்கே குமரியாறும் தமிழகத்தின் எல்லைகளாய் அமைந் திருந்தன "வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து' எனவரும் சிறப்புப் பாயிரத்தொடர் இவ்வுண்மை யினை வலியுறுத்துவதாகும். தமிழகத்தின் வடதிசைக்குந் தென் திசைக்கும் எல்லை கூறிய பனம்பாரளுர், அதன் கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்கும் எல்லேகூருதுவிட்டதன் கருத்தினை ஊன்றி நோக் குதல் வேண்டும். தமிழ்நாட்டின் வடக்குந் தெற்கும் மொழி பெயர் தேயமாகிய பிறநாடுகள் உண்மையால் அவ்விருதிசைக்கும் எல்லேகூறிக் கிழக்கும் மேற்கும் பிறமொழி வழங்கும் நாடுகளின் றிக் கடலே எல்லையாக அமைதலின் அவற்றுக்குப் பனம்பாரளுர் எல்லே கூருதுவிட்டார் என இளம்பூரணர் கருதுவர். 'கடல் கொள்வதன் முன்பு பிறநாடும் உண்மையின் தெற்கும் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின் கூறப் படாவாயின' என்பது இளம்பூரணர் தரும் விளக்கவுரையாகும். பிறமொழி வழங்கும் எல்லையிலிருந்து தமிழ் வழங்கும் நிலத் தினைப் பிரித்துணர்த்துதற் பொருட்டே "வடவேங்கடம் தென்குமரி