பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 273 தலைவனெடும் தலைவியொடும் (அவளைப் பெற்ற) நற்ருய் கூறியதாகக் கூறும் வழக்கமில்லை. எனவே நற்ருய் என யோரை நோக்கியே கூறுவாள் என்பது பெறப்படும். நற்ருய். செவிலி, தோழி என்னும் இவர்களோடும் தலைவ ைெடும் தலைவியொடும் வழியிடையே கண்டோர் உரையாடுதல் உலகியலிற்கண்ட வழக்கமாகும். தலைவியை உடன் கொண்டுபோகும் இடைச் சுரத்தின் கண்ணே தலைமகன் உலகியல் நெறியை உளங்கொண்டு தனது ஆற்றல் தோன்ற ஆணை மொழியினை எடுத்துரைத்தற்கும் உரியன் என்பர் ஆசிரியர். எனவே, மெல்லிய காமம் நிகழு மிடத்து வன்மொழியாகிய ஆணையினைத் தலைமகளிடம் கூறுதல் பொருந்தாதாயினும் உலகியல் கருதி அவ்விடத்துக் கூறுதல் தவருகாது என அறிவுறுத்தாராயிற்று. தலைவனும் தலைவியும் அல்லாத ஏனைப் பதின்மரும் தலை மகனும் தலைமகளுமாகிய இருவரோடும் மேற்கூறிப்போந்த மரபினல் இடமும் காலமும் கருதி உரை நிகழ்த்துதற்கு உரியராவர். 16. கேட்போர். இன்னுர்க்குச் சொல்லுகின்றது இது எனத் தெரிவித்தல் கேட்போர் என்பதாம். தலைவியும் தலைவனும் கூறக் கேட்போர் மேற் சொல்லப் பட்ட பதின்மருமே. பார்ப்பார், அறிவர் என்னும் இருவர் கூற்றும் எல்லோரும் கேட்கப் பெறுவர். பரத்தையும் வாயில் 1. தலே வனும் தலவியும் ஒருவர்க்கொருவர் கூறுவன, தம் கூற்றே யாதலின் தாம் கேட்டல் விதந்து கூற வேண்டுவதில்லை 2. அகத்திணை யோர், புறத்தினயோர் ஆகிய யாவரும் கேட்கப் பெறுவர் என்பதாம்.