பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 தொல்காப்பியம் நுதலியபொருள் களும் என்னும் ஈரிடத்தும் நிகழும் கூற்றுக்கள், தலைமகள் கேட்பாளாகக் கருதிச் சொல்லாக்கால் பயன்படுவன அல்ல." வாயில்கள் தம்முள் உசாவுமிடத்துத் தலைமகளை நோக்காது தமக்குள்ளும் உசாவுதலுரித்து’ ஞாயிறு, திங்கள், அறிவு, நாண், கடல், கானல், விலங்கு, மரம், தனிமை யுணர்வை மிகுதிப்படுத்தும் பொழுது, பறவை, நெஞ்சம் எனச் சொல்லப்பட்ட பதினென்றும் ஒன்றைக் கூறுதலும் கேட்டலும் இல்லாத அவை போல்வன பிறவும் தாம் கருதிய நெறியினல் ஒன்றைச் சொல்லுவனபோலவும் கேட்பன போலவும் சொல்லி அமையப்பெறும் என்பர் அறிஞர். 17. இடம்:- ஒரு செய்யுளேக் கேட்டால் இதன்கண் கூறப்படும் பொருள் நிகழ்ச்சி இன்ன இடத்து நிகழ்ந்தது' என அறிதற்கு ஏதுவாகியதோர் உறுப்பு இடம் எனப்படும். "ஒரு நெறிப்பட்டு ஓரியல்பாக முடியுங் கரும நிகழ்ச்சி இடமெனப்படும் என்பர் தொல்காப்பியர். ஒரு நெறிப்படு தலாவது, அகமாயினும் புறமாயினும் ஒரு பொருள்மேல் வருதல். ஓரியல் முடிதலாவது, அகத்தின்கண் களவு, கற்பு என்பவற்றுள் ஒன்றைப்பற்றியோ அல்லது அவற்றின் விரியாகிய இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு முதலியவற்றுள் ஒன்றைப்பற்றியோ, புறத்தின்கண் நிரைகோடல், மீட்டல், மேற்சேறல் முதலியவற்றுள் ஒன்றைப்பற்றியோ வருதல். கரும நிகழ்ச்சியாவது, மேற்கூறிய அகமும் புறமுமாகிய பொருட் பகுதிகளுள் யாதாயினும் ஒன்றைப் பற்றி நிகழும் வினை நிகழ்ச்சி. இது வினைசெய்யிடம் எனப்படும். காடுறையுலகம் முதலாக மேற்சொல்லப்பட்ட நிலப்பகுதிகள், 1. எனவே, தலைமகள் பாங்காயினுர் கேட்பச் சொல்லினும் அமையும் என்பதாயிற்று. 2. உம்மை எதிர்மறையாகலான் தம்முள் தாம் கேட்டல் சிறுபான்மை எனக் கொள்க.