பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 தொல்காப்பியம் நுதலியபொருள் என்ருற் போன்று, செய்யுள்செய்த புலவன் தன் புலமைத் திறத்தால் தானே வகுத்துரைக்கும் பொருட்கூறு அனைத்தும் பொருள்வகை யென்னும் இவ் வுறுப்பின் பாற்பட்டு அடங்கும் என்பர் பேராசிரியர். 24. துறை:- முதலும் கருவும் முறைபிறழ வந்தாலும் இஃது இதன் பாற்படும் என்று ஒரு துறைப்பட வகுத்தற்கு ஏதுவாகியதோர் கருவி அச் செய்யுட்கு உளதாக அமைத்தல் துறையெனப்படும். ஐவகை நிலத்திற்கும் உரிய வெனப்படும் பல்வேறு வகைப் பட்ட மக்களும் விலங்கும் பறவை முதலிய பிறவும் தம்மில் மயங்கிவரினும் அவ்வத்திணைக்கேற்ற இலக்கணமும் வரலாற்று முறைமையும் பிறழாமல் ஒரு துறையின் பாற்படச் செய்தல் துறையென்னும் உறுப்பாம் என்பர் ஆசிரியர். 25. மாட்டு:- செய்யுளிடத்தே அகன்றும் அணுகியும் கிடந்த பொருள்களைக் கொண்டுவந்து ஒரு தொடராகக் கூட்டி முடித்தல் மாட்டெனப்படும். மாட்டுதலாவது, தனித்து நிற்பத னைப் கொண்டுவந்து கூட்டி முடித்தல், செய்யுளிடத்தே கூறப்படும் பொருள் சேய்மைக் கண்ணே கிடப்பினும் அன்றி அணுகிய நிலையில் நிற்பினும் ஒரு தொடர்புபட அமைந்து பொருள் முடியும்படி கொண்டுவந்து இயைத்துணர்த் துதல் மாட்டென்னும் உறுப்பென்று சொல்வர் செய்யுள் வழக் குணர்ந்த அறிஞர். "இது, பலபொருட் டொடசாற் பலவடியான் வரும் ஒரு செய்யுட் கண்ணும், பல செய்யுளைப் பல பொருட்டொடரால் ஒரு கதையாகச் செய்யுமிடத்தும் வரும் எனவும், அருமையும் பெருமையும் உடையவாய்ப் பரந்த சொல் தொடர்ந்து பொருள் தருவதோர் இன்பம் நோக்கிச் சான்றேர் இம் மாட்டிலக்கணமே