பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 279 யாண்டும் பெரும்பான்மை வரச் செய்யுள் செய்தலின், பின் தொடர்நிலைச் செய்யுள் செய்தவர்களும் இம் மாட்டிலக்கணமே யாண்டும் வரச் செய்யுள் செய்தார்’ எனவும் கூறுவர் நச்சிர்ைக் கினியர். மேற்கூறிய எச்சமும் மாட்டும் இன்றியும் பொருள் தொடர்ந்தவாறே அமைய வெளிப்படச் செய்யுள் செய்தலும் அமையும் என்பர் ஆசிரியர். எனவே, மாட்டும் எச்சமும் ஆகிய இவ்வுறுப்புக்கள் மேற்கூறியவை போன்று அத்துணை இன்றியமை யாதன அல்ல என்பது பெறப்படும். 26. வண்ணம்: பாவின் கண்ணே நிகழும் ஒசை விகற்ப மாகிய சந்தவேறுபாடு வண்ணம் எனப்படும். வண்ணமாவன, பாஅ வண்ணம் முதல் முடுகு வண்ணம் ஈருக இருபது வகைப்படும் என்பர். அவற்றுள், பாஅ வண்ணம் என்பது, சொற்சீரடியின யுடையதாகி நூலின்கண் பயின்றுவரும் நூற்பாவினது ஓசை விகற்பமாகும். தாஅ வண்ணம் என்பது எதுகை இடையிட்டமையத் தொடுக்கப்படுவதாம். வல்லெழுத் துப் பயின்று வருவது, வல்லிசை வண்ணம் எனப்படும். மெல் லெழுத்துப் பயின்று வருவது மெல்லிசை வண்ணம். இடையெ ழுத்துப் பயின்று வருவது இயைபு வண்ணமாகும். அளபெடை பயின்று வருவது அளபெடை வண்ணமாகும். நெட்டெழுத்துப் ப யி ன் று வருவது நெடுஞ்சீர் வண்ணம் எனப்படும். குற்றெழுத்துப் பயின்று வருவது குறுஞ்சீர் வண்ண்மாம். நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்ப விரவி வருவது சித்திர வண்ணம் எனப்படும். ஆய்தம் பயின்று வருவது நலிபு வண்ணமாகும். அகப்பாட்டு வண்ணம் என்பது, முடியாத தன்மையின் முடிந்ததன் மேலது. புறப்பாட்டு வண்ண 1. பாட்டினது முடியின விளக்கிவரும் ஈற்றசை யேகாரம் முதலியவற்ருல் முடியாது, இடையடிகள் போன்று முடியாத தன்மையால் முடிந்து நிற்பது அகப்பாட்டு வண்ணமாகும்.