பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 தொல்காப்பியம் நுதலியபொருள் மாவது, முடிந்ததுபோன்று முடியாதாகி வருவது ஒழுகிய ஒசையால் இயன்றது ஒழுகு வண்ணமெனப்படும். நீங்கின தொடையாகி அமைந்தது ஒருஉ வண்ணமாகும். எண் பயின்று வருவது எண்ணு வண்ணமாகும். அறுத்தறுத்தொழுகும் ஒசை யினதாய் வருவது அகைப்பு வண்ணம் எனப்படும். துங்கலோசைத் தாய் வருவது தூங்கல் வண்ணமெனப்படும். சொல்லிய சொல் லிேைல சொல்லப்படும் பொருள் சிறப்பச் செய்வது ஏந்தல் வண்ணமாகும். அராகந்தொடுப்பது உருட்டு வண்ணமெனப் படும். நாற்சீரடியின் மிக்கு ஓடி உருட்டு வண்ணத்தை யொத்து அராகந்தொடுத்து வருவது முடுகுவண்ணமெனப்படும். வண்ணங்களாவன இவையேயாம்' என்பர் தொல்காப்பியர். 'குறில், நெடில். வல்லினம், மெல்லினம் இடையினம் என நிறுத்து, அகவல், ஒழுகிசை, வல்லிசை, மெல்லிசை என்ற நான்களுேடும் உறழ இருபதாம். அவற்றைத் தூங்கிசை, ஏந்திசை, அடுக்கிசை, பிரிந்திசை, மயங்கிசை என்பனவற்ருேடு 1. பாட்டின் முடியின யுணர்த்தும் இறுதியடி புறத்தே நிற்க வும் அதற்குமுன் உள்ள இடையடி முடிந்தது போன்று நிற்பது புறப்பாட்டு வண்ணமாகும். 2. "யாற்ருெழுக்குப் போலச் சொல்லிய பொருள் பிறி தொன்றனே அவாவாமை அறுத்துச் செய்வது ஒருஉ வண்ணம், எனப் பொருள் கொள்வர் பேராசிரியர் . 3. அறுத்தறுத் தொழுகுதலாவது, விட்டுவிட்டுச்செல்லுதல். ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும் வருதல் இதன் இயல்பாகும். 4. ஏந்தல்.மிகுதல். ஒருசொல்லே மிக்கு வருதலின் ஏந்தல் வண்ணம் எனப்பட்டது. 3. நெகிழாது உருண்ட வோசையாகலிற், குறுஞ்சீர் வண்ண மெனப்படாது உருட்டு வண்ணம் எனப்பட்டது என்பர் பேராசிரியர், 6. வண்ணம் என்பன சந்த ஒசையாதலால் அவ்வோசை வேற்றுமை செய்வன மேற்கூறிய வண்ணங்கள் இருபதுமேயன்றி வேறு இல்லை என்பதாம்.