பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 தொல்காப்பியம் துதலியபொருள் நிறீஇ அவற்ருல் உறழ்ந்து பெருக்க வரையறையிலவாகலும் உடையவாயினும் இவ் இருபது வகையானல்லது சந் தவேற்றுமை விளங்காதென்பது கருத்து எனப் பேராசிரியர் கூறிய விளக் கமே ஆசிரியர் தொல்காப்பியனர் கருத்தினை நன்கு புலப் படுத்துவதாகும் எண்வகை வனப்பு:- செய்யுளுறுப்புக்கள் பலவும் திரண்ட வழிப் பெறுவதோர் அழகினை ஈண்டு வனப்பு என்ருர், அஃது அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என எண்வகைப்படும். செய்யுட்கள் பலவுந் திரண்டவழி அவற்றின்கண் அமைந்த சொற்பொருள் அழகினை இவ் எட்டுறுப்பும் பற்றி வகுத்துணர்த்துதல் மரபாதலின் இவை வனப்பெனப்பட்டன. மாத்திரை முதல் வண்ணம் ஈருக முற்கூறப்பட்ட இருபத் தாறும் செய்யுள் ஒவ்வொன்றிற்கும் இன்றியமையாத உறுப்புக் களாகும். அம்மை முதலிய எட்டும் செய்யுட்கள் பலவாய்த் தொடர்ந்து பெருகிய தொடர்நிலைச் செய்யுட்கே பெரும்பான்மை யும் வருவன. சிறுபான்மை தனிச்செய்யுட்கும் இவ்வழகு கொள்ள வேண்டும். இங்ங்ணம் வகுப்பவே, தனிநிலைச் செய்யுளும் தொடர்நிலைச் செய்யுளும் எனச் செய்யுள் இரண்டாயிற்று' என்பர் நச்சிஞர்க்கினியர். 27. அம்மை:- சிலவாய் மெல்லியவாய சொற்களால் தொடுக்கப்பட்ட அடிநிமிர்வு இல்லாத செய்யுள் அம்மை என்னும் வனப்புடையதாகும். "சின்மென் மொழியாற் ருயபனுவலோ டம்மை தானே அடிநிமிர் பின்றே.” என்ருர் தொல்காப்பியர்ை.