பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 233 'அம்மை என்பது குணப்பெயர். அமைதிப்பட்டு நிற்றலின் அம்மையென்ருயிற்று என்பர் பேராசிரியர். அடிநிமிராமை-ஆறடி யின் மேற்படாமை. சிலவாதல் சுருங்கிய எண்ணினவாகிய சில சொற்களால் இயன்று வருதல், மெல்லியவாதல், சிலவாகிய அச்சொற்களும் பல எழுத்துக்களாலியன்று விரிந்தனவாகாமல் சிலவெழுத்துக்களாலமைந்து சுருங்கி நிற்றல். அறம், பொருள் இன்பம் என்னும் முன்றற்கும் இலக்கணங் கூறுவன போன்றும் அன்ருகியும் இடையிட்டு நிற்கும் இயல்பினது என்பார், 'தாயபனுவல் என்ருர். தாவுதல்-இடையிடுதல். அம்மை’ என்னும் இவ்வனப்பிற்கு, " அறிவின குைவ துண்டோ பிறதினுேய் தன்னேய்போற் போற்ருக் கடை” (315) எனத் திருக்குறளே உதாரணமாகக் காட்டினர் இளம்பூரணர். அங்ங்ணம் வந்தது பதினெண்கீழ்க்கணக்கு அதனுள் இரண்டடி யாயினும் ஐந்தடியாயினும் சிறுபான்மை ஆறடியாயினும் ஒரோ செய்யுள் வந்தவாறும் அவை சின்மென் மொழியால் வந்த வாறும் அறம் பொருளின்பத்திலக்கணங் கூறிய பாட்டுக்களும் பயின்று வந்தவாறும் இடையிடையே கார்நாற்பது, களவழி நாற்பது முதலியன வந்தவாறும் காண்க என நச்சிஞர்க்கினியர் விளக்குதலால், நாலடியார் முதலிய கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டும் அம்மையென்னும் வனப்பமைந்த இலக்கியங்க ளென்பது நன்கு புலம்ை. 28. அழகு:- செய்யுளுட் பயின்றுவரும் சிறந்தசொற் களால் ஓசை யினிதாகச் சீர்பெற யாக்கப்படும் அவ்வகைச் செய்யுள் அழகெனப்படும். இவ் விலக்கணத்தால் அமைந்தவை, அகநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்களாகும்.